புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் தீ பிடித்த வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு1

வவுனியாவில் தீ பிடித்து எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை தீ பிடித்துள்ளதாக வவுனியா பொலிஸாருக்கும் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கும் அயலவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் பரவிய தீயினை அனைத்து உள்ளே சென்ற போது , அறை ஒன்றினுள் வீட்டில் வசித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட பொலிஸார் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளது டன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.