புதினங்களின் சங்கமம்

காதலனுக்கு காசு சேகரித்த பாடசாலை மாணவியை மடக்கி பாலியல் வல்லுறவு புரிந்தவனுக்கு நடந்த கதி!!

காதலனின் தலைக்கவசத்தை உடைத்ததால், புதிய தலைக்கவசம் வாங்குவதற்காக சேகரித்த 8000 ரூபா பணத்தை எடுத்துச் சென்ற மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்து, அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைதுசெய்துள்ளார்.

கடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி சமீபத்தில் தனது காதலனின் தலைக்கவசத்தை உடைத்ததால், அவருக்கு புதிய தலைக்கவசம் வாங்க முடிவு செய்துள்ளார்.

பாடசாலை செல்லும் மாணவியிடம் தலைக்கவசம் வாங்க போதிய பணம் இல்லாததால், தெரிந்தவர்களிடம் பணம் கேட்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 18ம் திகதி கரவிடகரையில் இருந்து காக்கப்பள்ளி செல்லும் வீதியில் தனக்குத் தெரிந்தவர்களிடம் பணம் வசூலித்துள்ளார். அப்போது, வீதியோரம் இளநீர் விற்றுக்கொண்டிருந்த அறிமுகமான ஒருவரிடமும் நடந்த சம்பவத்தை கூறி, பணம் கேட்டுள்ளார்.

மாணவிக்கு ஒரு தொகை பணத்தை கொடுத்தவர், இளநீர் ஒன்றையும் குடிக்கக் கொடுத்துள்ளார்.

இளநீர் வியாபாரியுடன் மாணவி பேசிக் கொண்டிருந்ததை, அருகிலிருந்த இளைஞன் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் பேருந்தில் ஏறி மாணவி தனது பிரதேசத்துக்கு சென்றார். வீட்டுக்கு அண்மையாக பேருந்தில் இருந்து இறங்கிய போது, பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், மாணவியை அழைத்துள்ளார்.

இளநீர் வியாபாரிக்கு அருகிலிருந்து மாணவியின் கதையை கேட்டுக்கொண்டிருந்த இளைஞனே அவர்.

மாணவியுடன் பேசி, அவருக்கு எவ்வளவு பணம் வேண்டுமென கேட்டு, அதை தரலாம் என கூறியுள்ளார்.

பணத்தை பெறுவதற்கு தன்னுடன் வருமாறு குறிப்பிட்டு, மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, மெதகம பகுதிக்கு சென்று, பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடமிருந்த 8000 ரூபா பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், மாணவி தனது வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி, அவர்களுடன் மாதம்பே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாணவி தனது காதலனை சந்திப்பதற்காக ஹலவத்தை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, ​​தன்னை பலாத்காரம் செய்த காமுகன் அங்கு நிற்பதை பார்த்துள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கியதையடுத்து, அங்கு சென்ற பொலிசார் காமுகனை கைது செய்துள்ளனர்.