புதினங்களின் சங்கமம்

மகள் துஷ்பிரயோகம்; சிங்கள பிரதேச பொலிஸ் நிலையத்திற்குள் தமிழ்ப் பெற்றோர் தற்கொலை முயற்சி.!

வெலிமடை பிரதேசத்தில் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்த பெற்றோர்கள் இருவர் பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் அருந்திய பெற்றோர் ஆபத்தான நிலையில் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை நகரத்தில் 13 வயது சிறுமி தனியாக சுற்றித்திரிந்ததையடுத்து சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்பான மருத்துவ அறிக்கை பொலிஸாருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமியின் பெற்றோர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சிறுமி து.ஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தினுள் விஷம் அருந்தியதாக கூறப்படுகின்றது.

பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரும்போதே விஷப் போத்தலை மறைத்து வைத்திருந்தாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.

சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.