புதினங்களின் சங்கமம்

ஒரே நேரத்தில் 2 கள்ளக் காதலர்கள்!! கடுப்பான மற்றைய கள்ளக்காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்களத்தி!!

பொலன்னறுவை, மெதிரிகிரிய, மிரிசேன மீனவர் கிராமங்களில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டத்தரணி ஒருவர் மூலம் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து நேற்று (16) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தகாத உறவின் அடிப்படையில் 36 வயதுடைய பெண் சந்தேக நபரால் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 04 மாதங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அந்த பெண் ஏற்கனவே தன்னை விட வயதில் குறைந்த இளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனுடன் உறவைப் பேணிவரும் அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையுடனும் தொடர்பை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகராற்றிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.