முஸ்லீம் சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிட வேண்டாம்!! பொதுமக்களை எச்சரிக்கிறார் தேரர்!!
முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர, தியகெலினாவ , கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நடந்த நிகழ்வில் கலந்து
கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள இனத்தை அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு
வந்துள்ளன.எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் ஒருவர் லட்சக்கணக்கான எமது
குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார்.இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும்
தேசத்துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினர்.அப்படி
செய்யுங்கள் என நான் கூற மாட்டேன். ஆனால் செய்யப்படவேண்டியது அது தான். நாட்டையும்
மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்..” என்றும் குறிப்பிட்டார் தேரர்.