யாழ் வீரமாகாளி அம்மன் கோவிலுக்குள் துாசணத்தால் அர்ச்சனை!! அடிபடும் ஐயர்மார்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!
வீரமாகாளி அம்மனை கோயில் உரிமையாளர்கள் என கூறும் சைவக் குருக்கள் குடும்பங்கள் அலங்கோலப்படுத்தும் காட்சிகளை இங்கு தந்துள்ளோம். வீரமாகாளி அம்மன் கோவில் பிராமணர்கள் அல்லாத சைவக்குருமாரால் நிர்வகிக்கப்படும் கோவிலாகும். குறித்த அம்மன் ஆலயத்தால் வரும் வருமானம் மற்றும் வெளிநாடு அடியவர்களால் அனுப்பப்படும் பணம் ஆகியவற்றை குறி வைத்து குறித்த குடும்பங்கள் தங்களுக்கிடையில் அடிபடுகின்றன.
நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் குறித்த கோவிலின் உரிமையாளராக தானே உள்ளதாக கமல் ஐயர் என்பவர் எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்துள்ளார். அத்துடன் வீரமாகாளி அம்மன் கோவிலுக்குள் புகுந்து பெண் ஒருவர் உட்பட சிலர் செய்யும் அடாவடிகளையும் வீடியோவாக எமக்கு அனுப்பியுள்ளதுடன் தனது பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார். அதனால் குறித்த கமல் ஐயர் தந்த தகவல் மற்றும் வீடியோ பதிவினை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம்.
அத்துடன் பேஸ்புக்கில் வெளியாகிய கருத்துக்கள் சிலவற்றில் வீரமாகாளி அம்மன் கோவில் சைவக்குருக்களின் உறவான பெண் கோவிலுக்குள் புகுந்து சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. இந்தப் பெண் சைவ குருக்களான கணவனை விட்டுவிட்டு மாமிசம் உண்ணும் தாழ் சமூகத்தைச் சேர்ந்தவருடன் பாலியல் தொடர்புகளை மேற்கொள்வதற்காக தலைமறைவானதாகவும் பின்னர் மீண்டும் தமது உறவுகளுடன் சேர்ந்து கொண்டதாகவும் கமல் ஐயர் தெரிவித்த கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வந்திருந்தன. இவவாறான நிலையில் ஆசாரசீலர்களாக அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் கோவிலின் முக்கிய பகுதிக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த அடிபாட்டுக்குள் குறித்த கோவில் சைவக்குருக்கள பரம்பரையைச் சேர்ந்த அந்தப் பெண் ஆபாச சைகைகளுடன்ம் தனது வீரதீரத்தைக் காட்டுகின்றார். இவர்களின் ஆக்ரோச அடிபாட்டை பார்த்து வீரமாகாளி அம்மன் பயந்து கோவிலை விட்டு ஓடிவிட்டாரோ தெரியவில்லை……
இவ்வாறான கோவில் சண்டைகள் நடைபெறும் கோவில்களின் பொறுப்பினை நீதிமன்றத்தினை அணுகி இவ்வாறானவர்களிடமிருந்து அரசாங்கமோ அல்லது சமூக அமைப்புக்களோ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அத்துடன் கமல் ஐயர் கோவிலை சிறப்பாக நடாத்தும் திறன் பெற்றவர் என்பதுடன் குறித்த பெண்ணும் அவரது கணவனும் படிப்பறிவு குறைந்தவர்கள் என்பதுடன் துர்நடத்தைகளும் உடையவர்கள் என்றும் கமல் ஐயரின் சமூகவலைத்தளத்திற்கு கருத்துக்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தத் தகவல்கள் தொடர்பாக குறித்த பெண்ணோ அல்லது அவர்களது உறவுகளோ எதாவது மறுப்புக்கள் தெரிவிப்பின் அல்லது கருத்துக்கள் தெரிவிப்பின் இந்த இணையத்தளத்தின் கீழே உள்ள கொமன்ஸ் பகுதியில் அனுப்பவும்.