புதினங்களின் சங்கமம்

யாழில் இளம் ஐயர் ஹேரோயினை ஊசியில் ஏற்றி பாவித்ததால் உயிரிழந்தார்!!

ஹேரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழசந்துள்ளார்.

ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த அர்ச்சகர் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

ஏற்கனவே இன்னொரு அர்ச்சகர் ஹேரோயின் பாவித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.