புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

22 வயது யாழ் பல்கலை மாணவியை ஏமாற்றி 43 வயது லண்டன் காந்தன் அங்கிளுக்கு கட்டிக் கொடுத்த புறோக்கர் மீது தாக்குதல்!!

22 வயதான யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவியின் பெற்றோருக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என தெரிவித்து ஜாதகக் குறிப்பை கொடுத்துள்ளார் கலியாணப் புறோக்கர் ஒருவர். அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை தனிஆள் எனவும் லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளான் எனவும் கூறியே மாப்பிளையின் ஜாதகம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாப்பிளை யாழில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவும் மாப்பிளையின் சாதியை பெற்றோர் அறிந்து கொள்வதற்காக கூறியுள்ளார் புறோக்கர். பெற்றோர் ஜாதகம் பார்த்துள்ளார்கள். பொருத்தம் 85 வீதம் இருந்துள்ளது. அத்துடன் மாப்பிளையின் நெருக்கிய உறவினர் எனக் கூறிய வைத்தியரின் சாதியையும் மாணவியின் பெற்றோர் அறிந்துவிட்டு தமது சாதியைச் சேர்ந்தவர் என்பதையறித்து திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

மாணவியின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள். அத்துடன் மாணவியே மூத்த பிள்ளை என்றும் அவளுக்கு கீழ் மேலும் 3 பெண் பிள்ளைகள் இருப்பதால் தமக்கு மாணவி வெளிநாடு போனால் வறுமை நீங்கும் என குறித்த பெற்றோர் சந்தோசப்பட்டு திருமணத்திற்கு பூரண சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

அதனையடுத்து லண்டனில் வசிக்கும் யாழ் சுழிபுரம் பகுதி சொந்த இடமாகக் கொண்ட கந்தசாமி தேனுகாந்தன் என்ற 43 வயது இளைஞன் மாணவியின் பெற்றோருடன் தொடர்பு எடுத்துள்ளார். சீதனம் எதுவும் தேவையில்லை. கலியாணம் கட்டி 6 மாதத்துக்குள் மனைவியை லண்டன் எடுத்துவிடுவேன் என கூறியுள்ளார். அதனையடுத்து மகளுடன் காந்தன் தொலைபேசியில் கதைப்பதற்கு அனுமதியும் கொடுத்துள்ளார்கள். இதனையடுத்து மாணவியின் பெயருக்கு முதல் தடவையே காந்தன் பணம் அனுப்பி மாணவியை திக்குமுக்காடச் செய்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தனக்கு உறவுகள் இல்லை என்றும் கொழும்பிலேயே தனக்கு உறவுகள், நண்பர்கள் இருப்பதாகவும் கூறி கொழும்பில் உள்ள திருமண மண்டபத்தில் கலியாண ஒழுங்குகளையும் காந்தன் செய்து முடித்துள்ளார்.

கடந்த வார முற்பகுதியில் கொழும்பில் பல்கலைக்கழக மாணவிக்கும் காந்தனுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணின் உறவுகள் கொழும்பு வந்து மீண்டும் திரும்பி யாழ்ப்பாணம் செல்வதற்கு காந்தனே சொகுசு பஸ் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.ஆனால் குறித்த திருமண நிகழ்விற்கு புறோக்கர் அங்கு வரவில்லை. பதிவுத்திருமணம் அன்று மாலை நடக்கும் போதுதான் காந்தனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போட்டை திருமணப்பதிவாளர் வாங்கி பதிந்த போதே அந்த பாஸ்போட்டில் காந்தனின் பிறந்த திகதி மற்றும் ஆண்டின் உண்மை விடயம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. பதிவுத்திருமணம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு குழப்பம் நிலவியது. பல்கலைக்கழக மாணவியான மணமகள் மண்டபத்தின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டு மண்டபத்தி்ன் கதவையும் உறவுகள் உடைக்க முற்பட்டுள்ளார்கள். அதன் பின் மண்டப முகாமையாளரால் கதவு திறக்கப்பட்டு மணமகள் வெளியே கொண்டுவரப்பட்டார். காந்தன் தனது வயது தொடர்பாக ஏற்கனவே தான் புறோக்கரிடம் கூறிவிட்டேன் என்று அங்கு கூறியுள்ளான். அத்துடன் பல்கலைக்கழக மாணவியின் குடும்பம் வயது தொடர்பாக தமக்கு பிரச்சனை இல்லை என புறோக்கரிடம் சொன்னபடியால்தான் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் காந்தன் கூறினான்.

பதிவுத்திருமணம் நடக்காமல் முதலிரவும் நடக்காமல் அன்று அதிகாலை 1 மணியளவில் பெண் வீட்டார் யாழ்ப்பாணம் புறப்பட்டார்கள்.அடுத்த நாள் மாலை புறோக்கர் மாணவியின் உறவுகளால் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 63 வயதான ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்த தம்பிராசா வேல்ரத்தினம் என்பவரே மாணவியின் உறவுகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜாதகக் குறிப்பையும் பெண்ணின் ஜாதகத்திற்கு ஏற்றது போல் புறோக்கரே மாற்றியுள்ளமையும் பெண்ணின் உறவுகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை காதன் சரியான தகவல்களையே புறோக்கருக்கு கொடுத்துள்ளமையும் புறோக்கரே இரு பக்கமும் மாறி மாறி பொய் சொல்லியுள்ளதும் கண்டுபிடிக்கபட்டதுடன் பிரபல வைத்தியரின் உறவினர் என்பதும் பொய் என அவர்கள் அறிந்துள்ளனர். தான் தாக்கப்பட்டமை தொடர்பாக வேல்ரத்தினம் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அதே போல் வேல்ரத்தினம் தம்மை ஏமாற்றியமை தொடர்பாக பெண் வீட்டாரும் பொலிசாரிடம முறையிட்டுள்ளார்கள்.

காந்தன் தற்போது தமது நட்புக்களுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து தனது மனைவி மற்றும் உறவுகளை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம்.