புதினங்களின் சங்கமம்

16 மாணவிகளைக் காட்டுக்குள் கூட்டிச் சென்று கணக்குப் பண்ணிய சிங்கள கணக்கு வாத்தியாருக்கு நீதிமன்றில் நடந்தது என்ன?

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.