புதினங்களின் சங்கமம்

வடபகுதி பண்ணையாளர்களை மனச்சாட்சியின்றி வறுதெடுக்கிறார்களா கால்நடை வைத்தியர்கள்???

சமூகவலைத்தளத்தில் வெளிவந்த பண்ணையாளர் ஒருவரின் மனக்குமுறல் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
நான் வேறுயாரையும் இதில் இழுக்கவில்லை; எனக்கு நடப்பதை உதாரணமாக போடுகின்றேன் (ஆதாரத்துடன்) !
நைநாமடு என்னும் கால்நடை வைத்தியசாலைக்கும், என் பண்ணைக்கும் உள்ள இடைத்தூரம், 9 மைல்களாகும். வத்தியசாலையில் வைத்தியர் பின்வருமாறு கூறுகின்றார்; அதாவது, பண்ணையில் மாடுகளுக்கு வருதமெந்றால், , நேரில் வந்து புகார்கொடுத்துவிட்டு செல்லவேண்டுமாம்
பின்னர் அவர்கள், கோல் பண்டியவுடன், போக்குவரத்து வசதிகள் செய்யவேண்டுமாம். வந்து பார்த்துவிட்டு ? மருந்து எழுதித்தருவார்களாம், பின்னர் நாம் பாமசியில் வேண்டி, ஊசிபோட பிறகு வைத்தியரைக்கூப்பிட முதல் வழிமுறைகளைப்பின்பற்றவேண்டுமாம்!!
எனது கேள்விகள்: எங்கள் இடத்தில் போக்குவரத்துவசதிகள் இல்லை! அதனால், ஆட்டோபிடித்து, போய் பதிவு செய்துவிட்டு திரும்ப வர, 5000 ம் ரூபா! பின்னர் வைத்தியரை அழைத்துவந்து மீண்டும் கொண்டுபோய்விட 5000 ம் திரும்ப மருந்தை வேண்டிவிட்டு வைத்தியரை அழைத்து திரும்பவிட 10000 ம் ??? மருந்துச்செலவு வேறு……..அதாவது ஒரு மாட்டுக்கு வைத்தியம் பார்க்க 25000/ம் நாம் செலவு செய்யவேண்டும்????
நாம் எப்படி பண்ணை நடாத்துவது???? ஒருமாதத்தில் 3 ஆட்டுக்கும், 2 மாட்டுக்கும் நோய்வந்தால், ” ஒருலட்சம் செலவழிக்கவேண்டுமா?
பிறகு எதர்க்கு இலவச கால்நடை வைத்தியசாலை என்று பெயர்ப்பலகை போட்டுள்ளீர்கள்????
உங்கள் வைத்தியசாலைக்கு நாங்கள் ஆட்டோ பிடித்துவந்தால், வைத்தியர் லீவு என்கிறீர்கள்??? எப்பவந்தாலும் இன்று வைதியர் மீற்றிங், அல்லது கண்டிக்கு, காலிக்கு போயிட்டார் என்கிறார்கள், வைத்தியசாலை 8.30 மணிக்கு திறப்பதும் இல்லை! 9.00 மணியாகிறது) ஆதாரம் என்னிடம் இருக்கிறது)
1. தொலைபேசியில் பதிவு செய்யமுடியாதாம்!!! (செய்யக்கூடாதாம்)நேரில்தானாம் வரவேண்டும்!!! ( புகாரளிக்க) அப்ப எதர்க்கு உங்கள் அலுவலகத்துக்கு போண்வசதி? இதர்க்காக நாம் 5000 செலவுசெய்யவேண்டும்? எரிபொருளை நீங்கள் சேமிக்கிறீர்களா? அல்லது வேண்டுமென்றே அலக்கழிக்கிறீர்களா?
நீங்கள்தான் எரிபொருளை விரையப்படுத்துகிறீர்கள்???? “நீங்கள் நாட்டைக்காப்பாற்றுபவர்களா?? உங்கள் வாகனத்தில் வாருங்கள் என்று கேட்டால், தங்களுக்கு எரிபொருள் இல்லையாம்…. ஆனால் நாங்கள் நாலைந்து தரம் அலக்கழிந்து எரிபொருளை வீணாக்கலாம் , காசை கரியாக்கலாம்???
அப்ப எதர்க்காக உங்கள் வைத்தியசாலையில் வீணாக Driver வைத்து 60 ஆயிரம் சம்பளம் ஏன்கொடுக்கின்றீர்கள்?? ஒவ்வோருவைத்தியரும், பிறைவேற் கிளினிக் நடாத்துவீர்கள்??? உங்கள் தனிப்பட்ட தேவைக்கா Driver??? அல்லது மக்கள் தேவைக்கா?? என்னதேவைக்கு வீண்சம்பளம் ஒரு றைவருக்கு? ” உங்கள் அசமந்த அராஜகப்போக்கால்,” கண்டவன் எல்லாம் வைத்தியம் பார்த்து ஆடு மாடுகளை கொல்கிறார்கள்!!! உங்களுக்கு 25000 சிலவழிப்பதைவிட, கண்டவனைப்பிடித்து 3000 ம் நாலாயிரத்தோடு வைத்தியம் செய்யலாமே?? எப்படி நாட்டில் கால்நடை வளர்ப்பு விருத்தியடையும்???? மிகவும் கொடுமையாக மனச்சாட்சியற்று நடக்காதீர்கள் வடமாகாண அதிகாரிக்கு உட்பட்ட கால் நடைவைத்தியர்களே!!!!
ஆத்காரங்களை Comments box ல் பாருங்கள்…….
மிருகவைத்தியர்கள், தனியார் கிளினிக் நடாத்தி சம்பாத்திப்பதை தடுக்கவில்லையெனின் இப்படித்தான் நடக்கும்….
பால் மாடு யாழ்ப்பாணத்தில் இருந்து ( பண்ணைக்கு) இறக்க அனுபம்திதரவில்லை( பேர்மிட்) ஆனால் , அதே வைத்தியரிடமிருந்து யாழ்ப்பாண பால்மாடுகளை கடுமையான விலை கொடுத்துவேண்டி நட்டப்பட்டேன்! இதை ஆதாரத்துடன் வடமாகாண அதிகாரி வசிகரன் சேருக்கு அனுப்பினேன், எனக்கு இன்னமும் முடிவில்லை
அரசாங்க வாகனத்தில் பிறைவேற்றாக பண்ணையளுக்குப்போய் சம்பாதிக்கின்றனர் ஒவ்வோரு வெற்னெறி வைத்தியரும்! அதனால், கடுமையான சீர்கேடுகள் நடக்கிறது