புதினங்களின் சங்கமம்

டொக்டர் பெடியனின் லவ்வை ஏற்காமல் குடிகார வான் றைவருடன் ஓடிய யாழ்ப்பாண சாம்பவியின் கதை இது!!

1999ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் படையினர் வீதிகளில் முழத்துக்கு முழம் சோதனைச்சாவடிகளை போட்டு பயணிகளை பரிசோதித்த நேரம் அது. யாழ் – புன்னாலைக்கட்டுவன் மினி பஸ்சில் சனி, ஞாயிறு தினங்களில் ஏறும் சாம்பவி (பெயர் மாற்றம்) யாழ் நகரப்பகுதிக்கு அருகில் உள்ள சயன்ஸ் ஹோலில் ரியுசனுக்கு சென்று வந்தவள். யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஏ.எல் 2000 பிரிவில் கற்று வந்தவள். அதே சயன்ஸ்ஹோலில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு தெரிவாகி பஞ்சாச்சரம் வாத்தியாரிடம் ஆங்கிலம் கற்பதற்கு என வந்தவன் நிரூபன் (பெயர் மாற்றம்). நிரூபனும் சாம்பவியும் ஒரே கிராமத்தவர்கள். ஆனால் நிரூபன் சைக்கிளில் ரியுசன் வருபவன். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

சாம்பவி சினிமா நடிகைகள் போல் அழகானவள் இல்லை என்றாலும் முகலட்சணமாக பார்ப்பவர்களை கவரும் அழகானவள். அதே போலவே நிரூபனும் சினிமா ஹீரோ போல் இல்லாவிட்டாலும் மருத்துவருக்குரிய கவர்ச்சி அவனிடம் இருந்தது. நிரூபனுக்கு தந்தை இல்லை. தாயார் அரச ஊழியர். அத்துடன் நிரூபனுக்கு இரு தங்கைகளும் இருந்தார்கள். சாம்பவிக்கு 2 அண்ணன்கள் வெளிநாட்டிலும் ஒரு அண்ணன் இயக்கத்திலும் மற்றுமொரு அக்கா பல்கலைக்கழக மாணவியாகவும் அந் நேரத்தில் இருந்தார்கள். சாம்பவியின் தந்தை அந் நேரத்தில் தொலைத்தொடர்பகம் ஒன்றை வைத்திருந்தார். அவர் ஏற்கனவே பிரபல வர்த்தகர்.

அக் காலப்பகுதியில் நாவலர் வீதியே பயணிகள் பஸ்களின் போக்குவரத்துப் பாதையாக இருந்தது. சாம்பவி ரியூசன் முடித்துவிட்டு பெருமாள் கோவிலடியால் தனது நண்பிகளுடன் பஸ்சிற்காக நாவலர் வீதியில் நிற்கும் போதும் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சாம்பவி வரும் போதும் நிரூபன் சாம்பவியுடன் சில தடவைகள் அவளது கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக கதைத்துள்ளான். அதன் பின்னர் சாம்பவிக்கு தனது ஊர் நண்பன் மூலம் காதல் கடிதத்தை கொடுத்துள்ளான். அக் கடிதத்தில் நீ ஏ.எல் பரீட்சை சிறப்பாக முடியும் வரை நான் குறுக்கிட மாட்டேன் என்றும் அவளுக்கு நன்மை கொடுக்க கூடிய வேறு பல விடயங்களையும் குறிப்பிட்டே அந்தக் கடிதத்தை அவன் எழுதியிருந்தான்.

கடிதம் கொடுத்த அன்று மாலை வேளை சாம்பவின் அப்பா நிரூபன் வீட்டுக்கு வந்து நிரூபன் மற்றும் நிரூபனின் தாயாரிடம் தயவான முறையில் கதைத்துள்ளார். தனது மகளுக்கு காதலில் ஈடுபாடு இல்லை என்றும் அவளது கல்வியை குழப்ப வேண்டாம் என்றும் அவள் கற்று முடித்த பின் திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பிடித்த மாப்பிளையை தான் கட்டி வைப்பேன் எனவும் கூறிவிட்டு சென்றார். அத்துடன் நிரூபன் தனது காதலை கருக்கிவிட்டான். தாயாரின் கடும் ஏச்சுகளுக்கும் முகம் கொடுத்தும் சாம்பவியின் செயற்பாட்டாலும் நொந்து நுாலாகிவிட்டு மருத்துவப்படிப்பை தொடர்ந்தான். அதன் பின் வீதிகள், கோவில்களில் சாம்பவியை நிரூபன் கண்டாலும் உடனடியாக சாம்பவி முறாய்த்துப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

2002ம் ஆண்டு தொடங்கியது. சாம்பவி 2 தடவைகள் ஏ.எல் எடுத்தும் 3 பாடங்களில் சாதாரணதர சித்திபெற்றாள். பௌதீகவியல் பாடத்தில் தொடர்ச்சியாக இரு தடவைகளும் கோட்டை விட்டிருந்தாள்.

அந் நேரம் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட காலப்பகுதி. கொழும்பு பகுதியிலிருந்து சில ரோமியோக்கள் நவீன வாகனங்களுடன் வலம் வரத் தொடங்கிய நேரம். பாதை திறந்து கொழும்புக்கு நேரடியாக மக்கள் சென்று வரத் தொடங்கினர். இவ்வாறான நேரத்தில் கொழும்புக்கு ஹயஸ் வாகனத்தில் தாயுடன் சென்ற சாம்பவிக்கு அந்த வான் சாரதி ஏதோ ஒரு வழியில் நுால் விட்டுள்ளான். அவள் யார்? குடிகாரனா? பெண் பித்தனா? என எதையும் அறியாது அவனை உயிருக்குயிராக காதலித்து அதே ஆண்டே அவனுடன் கொழும்புக்கு ஓடிவிட்டாள் சாம்பவி. சாம்பவியின் தந்தை மற்றும் உறவுகள் அவளை அவனிடமிருந்த மீட்டுக் கொண்டுவர பெரும் பாடுபட்டும் முடியவில்லை.

2006ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறினான் நிரூபன். மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவனுக்கு நியமனம் கிடைத்தது. 2007ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவர்களது துாரத்து உறவாக இருந்து வவுனியாவில் நிரந்தரமாக வசித்து வந்த வங்கி ஊழியரான பெண்ணை ( தாயார் மற்றும் உறவுகளால் நிச்சயித்து செய்த திருமணம்) திருமணம் முடித்தான். 2010ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த இடத்துக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் நிரூபன் வந்தான். தாயாரின் நேர்த்தியை நிவர்த்தி செய்வதற்காக கிராமத்தில் உள்ள கோவிலுக்கு நிரூபன் குடும்பம் பொங்கல் பொங்கி பூசை செய்த போது சாம்பவி கணவனை விட்டுப் பிரிந்து 5 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டுச் சென்றாள்.

பெண்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தேடிக் கொள்கின்றார்கள்…..

நன்றி

இந்தப் பதிவிற்கான தகவல்களை தந்த

அரசேந்திரன் குலேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்