செல்லக் கதிர்காமத்தில் நிலநடுக்கம்!!
செல்லக்கதிர்காமம் என அழைக்கப்படும் கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24 அளவில் பதிவாகியுள்ளது.
2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் அம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த காலங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

