புதினங்களின் சங்கமம்

மன்னாரில் சிறுமியைக் கடத்துபர்களின் புகைப்படங்கள்…வீடியோ

மன்னாரில் இரு சிறுமிகளை இனிப்பு வழங்கி ஏமாற்றி கடத்த முற்பட்ட இருவரை
 மன்னார் நீதிமன்றில் முற்படுத்தி சிறையிலடைத்தனர்..
மன்னார் தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட  பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் வியாபாரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்தவர்கள் அவ் வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி, வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு சிறுமிகளும் தப்பி ஓடிச் சென்று இது தொடர்பாக கிராமத்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களையும் மடக்கிபிடிதுள்ளனர்.
சிறுமிகள் தப்பியோடிய நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெளி நாட்டவர் எவரும் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொது மக்கள் தலைமன்னார் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர். தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இன்று இருவரையும் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர்.
May be an image of 1 person, beard and smiling