புதினங்களின் சங்கமம்

முனவ்வராவுக்கு நடந்தது என்ன..? கொலையாளியின் வாக்குமூலம் !

கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரியும் யுவதி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்தார்.
இவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில்,
அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரிய வந்தது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர்.