புதினங்களின் சங்கமம்

யாழில் இடம்பெற்ற விபத்துக்களில் பல பொலிசார் காயமடைந்தும் இருவர் பலியானதற்கும் காரணம் மதுபோதையா?

யாழில் கடந்த சில நாட்களில் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெவ்வேறு வீதி விபத்துக்களின் போது காயமடைந்தும் இருவர் பலியாகியும் உள்ளார்கள். இவ்வாறு காயமடைந்த, பலியான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மது போதையில் மோட்டர் சைக்கிள்களைச் செலுத்தியதாலேயே காயமடைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பொலிசாருக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொலிசார் தமக்கு கிடைக்கும் சம்பளப்படிகளையும் இலஞ்சப் பணத்தையும் பயன்படுத்தியும் சாராயக் கடைகளில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தியும் கடமை நேரம் இல்லாத சமயங்களில் மது போதையில் வீதியில் வாகனத்தில் செல்வதாக குற்றச்சாட்டுக்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளன. பெரும்பாலான பொலிசார் சுய ஒழுக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் மதுவுக்கு அடிமையான சில பொலிசாரே இவ்வாறு வீதிகளில் மது போதையில் செல்வதாகவும் அதனாலேயே அவர்களில் சிலர் விபத்துக்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.