புதினங்களின் சங்கமம்

யாழ்- கொழும்பு பேருந்தில் கஞ்சா கடத்திய சிப்பாய், கடற்படை வீரர் உள்ளிட்ட 3 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் பொதுமகன் கைது செய்யப்பட்டதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான சிப்பாய், கடற்படை வீர் மற்றும் 37 வயதுடைய பொதுமகன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் விடுப்பில் இருந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகளை நேற்று பூனாவ பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் பைகளில் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.