புதினங்களின் சங்கமம்

யாழ் நபருக்கு கனடாவிலிருந்து அனுப்பிய 8.5 கோடி ரூபா குஷ் போதைப் பொருள் பிடிபட்டது எப்படி?

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கனடாவிலிருந்து அனுப்பபட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

2 மரப்பெட்டிகளை கொண்ட பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும்.