யாழில் சுதேச வைத்தியம் பார்க்கும் ரகுராமுக்கு எதிராக யாழ் அரச வைத்தியர்கள் போர்!! 2 சிறுவர்களைக் கொன்றாரா? மக்கள் ஆதரவு யார் பக்கம்? (வீடியோ)
யாழ் உரும்பிராய் பகுதியில் தன்னை அக்குபஞ்சர் வைத்தியர் எனவும் சித்த வைத்தியர் எனவும் கூறிக் கொண்டு பல்வேறு நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கும் கதிரவேலு ரகுராம் என்பவருக்கு எதிராக யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போர்க் கொடி துாக்கியுள்ளது. அவர்களது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு அவர்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.
யாழ்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த கதிரவேலு ரகுராம் எனும் நபர் முகநூலில் தன்னை வைத்தியர் என போலியாக விளம்பரம் செய்கிறார்.இவர் எந்தவித அடிப்படை தகுதியினையோ, அல்லது மருத்துவ கல்வியினையோ கற்கவில்லை என்பதோடு இலங்கையின் எந்தஒரு மருத்துவ சபையிலும் பதிவு செய்யபடாத ஒருவராவார்.
தான் ஒரு அக்குபஞ்சர் வைத்தியர் என்றும், அதியச சக்தி கொண்டவர் , நாடியை கட்டுபடுத்தி வைத்தியம் செய்பவர் என்றும் பல்வேறு வடிவங்களில் தன்னை விளம்பரப்படுத்தி மக்களிடம் பணமோசடி செய்கிறார்.மேற்படி நபரின் கருத்துகள் விஞ்ஞான ரீதியில் ஆதாரமற்றதும், அடிப்படை அறிவற்றதும், மோசடியானதுமாகும்.இவரின் பொய்களை நம்பிஇவரிடம் சென்ற பலர் உயிரிழந்து இருப்பதுடன், அண்மையில் இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர், இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் மருத்துவ முறைகள் சம்மந்தமாக தவறாக செய்யும் பிரசாரங்களுக்கு எதிராக எதிகாலத்தில் நடவடிக்கை எடுப்பதற்க்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகின்றது
இவர் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருப்பதுடன், தங்கள் நோய்களுக்கு சரியான மருத்துவரினை நாடி சிகிச்சை பெறுமாறு யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டிகொள்கிறது.
இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவுக்கு எதிராகக அதே பேஸ்புக்கில் ஏராளமானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். அந்தக் கருத்துக்களை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம். அத்துடன் இவ்வாறு பதிவு வெளியிட்ட பின்னரும் ரகுராம் இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதனையும் இங்கு தந்துள்ளோம்.
-
ஒருவரின் அனுமதி இன்றி முகநூலில் அவரின் படத்தை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.அத்தோடு அவர் ஆதார பூர்வமாக செய்து காட்டியுள்ளார்.முடிந்தால் அவரை நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு அழைத்து செல்லுங்கள்.
நித்யவித்யார்த்தியின் இரகசிய பார்வை
முதலாவது கஞ்சாவ அடிச்சிட்டு நிர்வாண படங்களை வெளியிட்டிம் வைத்தியருக்கு ஏதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபட்டதாமக்கள் ஆர்பாட்டம் பன்னியும் இதுக்க GMOA Branch Union – Teaching Hospital Jaffna தகுந்த ஆதாரத்துடன் குரல்பதிவுகள் வேறு இனையத்தில் சமூக ஊடகங்களில் பரவியதற்க்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டது தங்களாள்இப்படியான வைத்தியர்கள் மத்தியில் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை
ஆபாச படம் வெளியிட்ட பெண் வைத்தியர் இவருக்கு என்ன சட்ட நடவடிக்கைஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தீர்கள்ஏன் அது அவரது தனிபட்ட விடயம் என்று செல்லலாம் ஆம் அது அவரதும் அவர் சார்ந்தவரகளதும் என்றால் சரி இது உலகத்துக்கே காட்டி உள்ளாரே
YOUTUBE.COMடொக்டர் பிரியாந்தியின் ரகசியங்கள் அம்பலம் – என்னா பேச்சு பேசுராங்கப்பா #priyaanthini #kilinochchiடொக்டர் பிரியாந்தியின் ரகசியங்கள் அம்பலம் – என்னா பேச்சு பேசுராங்கப்பா #priyaanthini #kilinochchi
-
எந்தவொரு நோய்க்கும் நாம் 100 வீதம் குணப்படுத்துவோம் என உங்கட சங்கம் எழுத்து மூலம் அறிக்கை தருமா ??
8
-
ஒரு அரச வைத்தியர் தனியார் வைத்தியசாலையில் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்து ஒரு நோயாளியை கொன்றார் அல்லவா அதற்காக ஒரு அறிக்கையாவது வெளியிட்டீர்களா சங்கமான நீங்கள் ? ஒரு கண் வைத்தியர் 9 நோயாளிகளின் கண்ணை தன் தவறால் இழக்க பண்ணினார் இதற்காக என்ன செய்தீர்கள் ?
-
நீங்கள் மட்டும் பெரிய திறம் தானே..
வைத்தியசாலையில் நிற்பது இல்லை.. தனியார் கிளினிக்கில் அதிக நேரம் செலவழித்து காசு பார்ப்பது மட்டும் சரியோ
. உங்களுக்கு ஆப்பு அடிக்க வந்திட்டார் என்று நடுக்கம் -
இவரது சிகிச்சைகள் தரமானவை நீங்கள் கூறுவது போல் அவர் பணம் சுருட்டவில்லை. சாதாரணமாக சிறிய வருத்தத்துடன் வந்தாலே அதை பெரிதாக்கி சனங்களை பயப்படுத்தி காசு புடுங்கும் கூட்டம்தான் நீங்கள்.. வைத்தியசாலைக்கு வரும் மருந்தை காசுக்காக வெளி கிளினிக்ல விற்கும் கூட்டம்தானே நீங்கள்.. யாழ் பெரியாஸ்பத்திரி பார்மசில கிடைக்காத மருந்து அங்கு உள்ளே மருந்துகள் விற்கும் பார்மசி யில் கிடைக்கிறது எவ்வாறு???
-
அவர் மருத்துவத்தையும் தாண்டி.மன அமைதியையும் மனித நேயத்தையும் கொண்டவர்.வேடிக்கை என்ன வென்றால். எனது மனைவியின் கையில் விரைப்பு நீங்க மணிக்கட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறினார்கள். வேறுவழி இல்லை என்றார் கள் .இறைவன் அருளால் இப்போது 1 வாரம் தான். Just one timeசரியாகிவிட்டது. She is completely alright… 250 rs தான் சிலவு.அவரா பண மோசடி செய்பவர்..???? எழை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் உண்மையை மக்களுக்கு கூறவேண்டும் என்பது தவரா.???? புரியவில்லை உங்களது குற்றச்சாட்டுகள்.. தேவை ஏற்படின் நான் அனைத்து Hospital report களையும் பதிவிடுகிறேன்
-
இதுவும் ,ச.ம அதிகாரி பிரகண்டன் செல்லையாவிற்கு (மானிப்பாய்)சமர்ப்பணம்.இந்தச் சிறுவன் 2001 ஆம் ஆண்டு வலிப்பு நோய் காரணமாகஎன்னிடம் சிகிச்சைக்கு வருகிறார். ஓடி விளையாடும்பொழுது கதவில் தலை மோதியதன் காரணமாக வலிப்பு ஏற்படுகின்றது.முதலில் நரம்பியல் மேதாவியிடம் கொண்டு செல்கிறார்கள்.இலண்டனிலிருந்து வந்த இந்த விஞ்ஞானபூர்வமான அறிவு மேதாவி மலேரியா நோய்க்கு சிகிச்சை செய்கிறாரர்.தகப்பனார்,இவருடைய சிகிச்சையில் நம்பிக்கையிழந்து அந்த நேரம் வடபகுதியில் கடமையிலிருந்த வடபகுதி இராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொழும்பிற்குக் கொண்டு செல்கிறார்கள். கொழும்பிலும் சிறப்பு நிபுணர்கள் மலேரியாவுக்கு தான் சிகிச்சை செய்கிறார்கள். மீண்டும் வேறு சிறப்பு நிபுணர்களிடம் சிகிச்சை. பின்பு 5 வருடங்களுக்கு தேவையான வலிப்பு மருந்துகளோடு யாழ் நகருக்கு வருகிறார்கள் யாழில் மருத்துவ பீட பேராசிரியரும் விரிவுரையாளரும் ஆன பரமேசுவரன் அவர்களின் வழிகாட்டலில் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் . ஆங்கில மருந்துகளால் உடலில் சேமிக்கப்பட்ட கழிவுகள் வெளியேற்றும் செயல்முறையின் பின் அதாவது பலவிதமான நோய் வெளிப்பாடுகளின் பின் 3 மாதங்களில் பூரணமாக குணமாகியது. அவருக்கு ஏற்பட்ட வலிப்பு முழுமையாகவும் அதிவிரைவாகவும் குணமாகியது நோயின் ஆரம்ப நிலையில் என்னை அணுகியதால் அவரின் வலிப்பு நோய் மிக விரைவாகவும் பூரணமாகவும் குணமாகியது. இவர் இன்று பல்கலைகழகத்தில் பொறியியல் துறை கற்கை நெறியை நிறைவு செய்து பொறியியலாளராக பணி புரிகிறார். இவருக்கு அண்மையில் தான் திருமணம் நிகழ்ந்தது . இவரின் மனைவி யாழ் பொது மருத்துவமனையில் நரம்பியல் சிறப்பு நிபுணர். இறைவனின் கருணையால் இவருக்கு எங்கள் வழிகாட்டல் கிடைக்காவிட்டால், நிச்சயமாக தொடர் வலிப்புமருந்துகளை உட்கொண்டதன் காரணமாக மிகப்பெரும் துன்பத்திற்கு இவர் உள்ளாகியிருப்பார்.ஆங்கில மருத்துவம் என்ற மோசமான பயங்கரவாத மருத்துவ முறையால் பொறியியல் கல்வியும் கற்றிருக்க முடியாது திருமணமும் செய்திருக்க முடியாது மிக பெரும் துன்பத்தை இன்று சந்தித்து இருப்பார் அல்லது வருடக்கணக்கான தொடர் மருந்துகளின் பாவனை காரணமாக அதன் கொடுமையான முழுமையான நஞ்சுகளின் விளைவுகளின் காரணமாக இறந்திருப்பார். இன்று இவரது திருமண நிகழ்விற்கு அழைப்பிதழ் கூட தராமல் அவருடைய பெற்றோர்கள் தங்கள் நன்றியுணர்வினை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எங்கருந்தாலும் வாழ்க வளமுடன்.இது யாழ் வைத்தியர் சங்கத்திற்கும் ,பெரு மதிப்பிற்குரிய பேரன்பும் ,பண்பும் நிறைந்த, தமிழர்களுடைய இரத்தத்தில் ஊறிய தமிழர்களின் உயிரோடு உயிராக இரண்டறக் கலந்த தமிழ்மருத்துவ தத்துவங்களை மிகவும் நேசித்துநிற்கின்ற,தமிழர்களோடு இரண்டறக் கலந்த தியானப் பேராற்றலை,சித்தர்கள்,ஞானிகள் முனிவர்களைப் பெரிதாக மதிக்கின்ற ஆணவம் பெருமை ,பொறாமை ,தலைக்கனம் திமிர்க்குணம், பொறாமைக் குணம் அறவேயற்ற தூய்மையே உருவான ஒரு செயற்திட்டம் உண்மையானதா? ,அல்லது பொய்யானதா?, சத்யம் நிறைந்ததா ?என்பதனை பொறாமைக்குணம் சிறிதளவுமில்லாமல்,நேரடியாக சம்பந்தப்பட்ட களநிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளோடு விஜயம் செய்து உண்மையை ஆய்வு செய்து ஆய்ந்தறிநது உலகிற்கு வெளிப்படுத்தும் உயர் பண்பும் நிறைந்த யாழ் ச.ம அதிகாரி பிரகண்டன் செல்லையாவிற்கும் அவருடைய வாலுகளிற்கும் சமர்ப்பணம்.Kathiravelu Rahuram திரு. ரகுராம் அவர்களின் திறமையான நாடி மருத்துவம் காரணமாக எனது மனைவி முற்றாகச் சுகமாகி உள்ளார். ஆங்கில மருத்துவத்தின் குளிசை மருந்துகளைப் பல வருடம் பாவித்து மிகவும் துன்பப்பட்டார்.அதிலிருந்து முற்றிலும் விடுதலையாகி இப்போது நல்ல சுகதேகியாகி உள்ளார். இவரது திறமை அறிந்து வெளிமாவட்டம், மாகாணம், வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து மருந்து எதுவுமின்றிப் பூரண சுகம் பெறுகின்றனர்.இவரைப் போல இன்னமும் 100 பேர் உருவானால் 250 ரூபா போன்ற மிகவும் குறைந்த செலவில் நிறையப் பேர் சுகப்படுவார்கள். அண்மையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் தோல் நோய்க்குச் சிகிச்சைக்குச் சென்ற போது மருத்துவர் கட்டணம் மருந்து என 6730 ரூபா செலவு.ஆனால் இவரது எளிமையான மருத்துவம் இன்று சிலருக்குக் கசக்கிறது.இந்தப் பொது வெளியில் ரகுராமுக்குக் கிடைக்கும் ஆதரவு மன நிறைவைத் தருகிறது.Kathiravelu Rahuram உம்முடைய மொட்ட தலையில முடி முளைக்க நாடி வைத்தியம் ஒண்டும் இல்லையோ? நீர் கான்சர குணப்படுத்த போறீராம் என்ன?
-
பருத்துறையில் வைத்தியர்களின் கவலையீனமாக கற்பப்பை வெடித்து சிசு உயிரிழந்துள்ளதாம் காரணம் யார் ?? இதற்கு உங்கள் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அறிய தரவும்.பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து கானொலி வெளியிடுவாரா?இப்படி யாராக இருந்தாலும் மக்களை ஏமாற்றக்கூடாது.முகநூலில் அக்குபஞ்சர் மருத்துவத்திற்கும் ஆங்கில மருத்துவத்திற்கும் இடையே பெரும்போர் .அக்குபஞ்சர் அணி வெல்லும் நிலை.சர்க்கரை நோய் என்று போனால் மருந்தின் அளவை கூட்டுவது பிறகு கையை காலை வெட்டுவது. இதுதான் உங்கள் ஆங்கில மருத்துவம்? பாரம்பரிய மருத்துவத்துக்கு மக்கள் திரும்ப வேண்டும்இதில் பலர் ஏன் இந்த வைத்தியருக்கு கொடி பிடிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. இவரால் பாதிக்கப்பட்டவர்களில் எனது அத்தையும் ஒருவர். Rheumatoid arthritis க்கு சிகிச்சை செய்கிறேன் என்று அவரை நடக்க முடியாமல் செய்தது தான் அவரது சாதனை. எல்லா மருத்துவமுறைகளிலும் சாதக பாதகங்கள் உண்டு. தன்னுடைய மருத்துவமுறையில் இவர் சிறந்தவர் என்றால் அதை திறம்படச்செய்யவேண்டும். அதை விடுத்து மற்றைய மருத்துவமுறைகளைத் தரக்குறைவாகப் பேச இவருக்கு உரிமையில்லை. படித்தவர் இவ்வாறு பைத்தியம் போல பேசமாட்டார்
-
திரு. ரகுராம் அவர்களின் திறமையான நாடி மருத்துவம் காரணமாக எனது மனைவி முற்றாகச் சுகமாகி உள்ளார். ஆங்கில மருத்துவத்தின் குளிசை மருந்துகளைப் பல வருடம் பாவித்து மிகவும் துன்பப்பட்டார்.அதிலிருந்து முற்றிலும் விடுதலையாகி இப்போது நல்ல சுகதேகியாகி உள்ளார். இவரது திறமை அறிந்து வெளிமாவட்டம், மாகாணம், வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து மருந்து எதுவுமின்றிப் பூரண சுகம் பெறுகின்றனர்.இவரைப் போல இன்னமும் 100 பேர் உருவானால் 250 ரூபா போன்ற மிகவும் குறைந்த செலவில் நிறையப் பேர் சுகப்படுவார்கள். அண்மையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் தோல் நோய்க்குச் சிகிச்சைக்குச் சென்ற போது மருத்துவர் கட்டணம் மருந்து என 6730 ரூபா செலவு.ஆனால் இவரது எளிமையான மருத்துவம் இன்று சிலருக்குக் கசக்கிறது.இந்தப் பொது வெளியில் ரகுராமுக்குக் கிடைக்கும் ஆதரவு மன நிறைவைத் தருகிறது.அருமையான விடயம் மருந்துக்கம்பனிகளின் நாய்க்குட்டிகளைக்கும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நேர்மை தழைத்தோங்கும்…மருந்துக் கம்பனிகளின் நாய்க்குட்டிகளால் தான இந்த நபர் பிரபலமானார் மக்களும் இவரை நாடினர்…
-
‘சங்கங்கள்’ அதன் அங்கத்தவர் நலன்களில் மட்டுமே அக்கறையுடன் செயற்படுகின்றன, அங்கத்தவர்கள் எதனை செய்தாலும் அதனை நியாயப்படுத்துவதே அவற்றின் ‘கடமையாக’ (!!!) உள்ளன, பொதுமக்களது நலன் என்பது இரண்டாம் பட்சமே, மேலும் நோயாளிகளை தமக்கான பணமீட்டும் வகையிலேயே நடத்துகின்றனர், ‘மனிதாபிமானம்’ என்பது மறக்கப்பட்டு, முதல்தர வணிகமாக மருத்துவத்துறை மாறியிருப்பது காலக்கொடுமை … மறைந்த ‘மருத்துவர் கெங்காதரன்’ போன்ற சேவையுள்ளமும், கருணையுமுள்ள சிறந்த மருத்துவர்கள் ஒருசிலரே இன்றுள்ளனர் …3 வருடம் சைனஸ் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு உங்கள் மருத்துவம் தராத நிரந்தர தீர்வை பெற்று தந்தது அக்குபஞ்சர் மருத்துவமே என்பதை இங்கு அறிய தருகின்றேன்.அப்ப ஆங்கில மருத்துவத்தில யாருமே சாகல வாற எல்லாரையும் நல்லபடியா குணபடுத்தி வீட்டுக்கு அனுப்புறீங்க அப்டியா? ஒரு மருத்துவ முறைல 100% எல்லாரையும் காப்பற்ற முடியும்னு உறுதி கூற முடியாது. ஆனா உங்கட அலோபதி மருத்துவத்தின்ட பக்கவிளைவுகளோட பாக்கைக்க மாற்று மருத்துவ முறைகள் மேலானது தான். அவசர சிகிச்சை உயிருக்கு போராடுற ஒரு கட்டத்தில மட்டும் ஆங்கில மருத்துவம் தான் வெஸ்ற் அதை நான் ஏற்றுகொள்றன் ஆனா வருத்தமே வராம வந்த வருத்தங்களை படி படியா மாத்த மாற்று மருத்துவ முறைகள் தான் சிறந்தது. எத்தனையோ ஆங்கில மருத்துவர்களால கைவிட பட்ட கேசுகள் எல்லாம் மாற்று மருத்துவ முறைகளால குணமடைஞ்ச போதிய அளவு வரலாறு சான்றுகள் உள்ளன. சும்மா உங்கட மருத்துவம் மட்டும் தான் மருத்துவம் மற்றதெல்லாம் டம்மி பீ்ஸ் எண்டு விளக்கை பிடிச்சு கொண்டு வர கூடாது. அதோட அறிவியல் எண்டது அலோபதி மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானது இல்லை எதுக்கெடுத்தாலும் அறிவியல் அறிவியல் எண்டு கதற கூடாது. அறிவியல் எல்லாத்துக்கும் பொதுவான ஒரு விடயம் அதை எங்கட மருத்துவத்துக்கு மட்டும் தான் சொந்தம் எண்டது போல உரிமை கொண்டாடுறதே முதல் பிழையான விசியம். உங்கட அலோபதி மருத்துவத்தில சில செயல்முறைகளை செய்து வருத்தங்களை மாற்ற முற்படுறீங்க அதே போலதான் மாற்று மருத்து முறைகள்லயும் சில செயல்முறைகளை செய்து வருத்தங்களை மாற்ற முற்படுறாங்க. இரண்டிலயுமே நீங்க ஏற்றாலும் சரி ஏற்கலனாலும் சரி விஞ்ஞான அறிவியல் விளைவுகள் வந்துதான் ஆகும் அந்த அறிவு இல்லாம எந்த அறிவியல் அடிபடையும் இல்லைனு உங்கட எந்த அறிவை வைச்சு சொல்றீங்க. கொரானா ஊசி எண்டு எல்லாருக்கும் போட்டிங்க போட்டவங்க யாரும் சாகாம இருந்தாங்களா? போட்டும் தான் கொத்து கொத்தா செத்தாங்க இப்ப அந்த ஊசி போட்டவங்களுக்கு வேற விதமா சைட் எபக்ட்லாம் காட்டுது உங்கட செயல் முறைகளால பக்க விளைவுகள் அதிகம் மாற்று மருத்து முறைகளால இரசாயன பக்க விளைவுகள் தாக்கம் இல்லை. நீங்க மருந்தை உணவு போல கொடுப்பீங்க அவங்க உணவை மருந்தா பாவிக்க வைப்பாங்க இப்டி பல இருக்கு. சும்மா அறிவியல் உங்களுக்கு மட்டும் எழுதி வைச்ச சொத்து போல அறிவியல் அறிவியல் எண்டு தூக்கிட்டு வராதீங்கபா. முதல்ல அறிவியல் எண்டா என்ன எண்டதுகான புரிதலை வளத்துகோங்கப்பா. ஏதோ ஆஸ்பத்திரிக்கு வாற நோயாளர்கள் எல்லாரையும் முழுமையா குணபடுத்தி வீட்டுக்கு அனுபுறது போல தெனவட்டு கதைகளா இருக்கு. என்ன பிழைப்பு கெட்டு போய்டுமே எண்ட பயமா ?
உங்கட மனநிலைகளை எல்லாம் நினைச்சா சிரிக்கவோ அழவோனு புரியலநம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு.என்னுடைய நோய் குணமாகி உள்ளதே அப்போ அவர் செய்வது மருதுவம் இல்லையா. 20 வருடம் மருந்து பாவித்தவர் தற்போதூ பகுதியளவில் குணமாகி உள்ளார் என் அம்மா ஆக பாதி மன நோயாளியாக வெளியேறும் பெரரும்பாலன வைத்தியர்கள் ( இதில் உடன் பாடு இல்லை எனின் அனைத்து பல்கலைகழக மருத்துவபீட மாணவர் விடுதிகள் CC tv பூட்டி அவர்கள் நடத்தை Depression ஆக அவர்கள் பாவிக்கும் மருந்துகளையும் கவனிக்கவும்). ஒருவர் மீதான காழ்ப்புணர்சியை இவ்வாறு வெளிப்படுத்தாதீர்கள். நாடி மருத்துவம் என்பது தமிழ் பாரம்பரிய மருத்துவ முறை இந்தியாவில் பிரபலமாக வர்ம சிகிச்சை, நாடி சிகிச்சை என்று வழக்கத்தில் உள்ளது. நீங்கள் முதல் இலங்கையில் தனியார் மருத்துவ பல்கலைகழகம் உருவாக்க விடுங்கோ பிறகு மக்களுக்கு விழிப்புணர்வு குடுக்கலாம்.ஐயா ஐயா பொறுங்கோ அவர் மருந்து எதுவுமே தாறதும் இல்லை தரவும் மாட்டார் நரம்புகளை தூண்டி உணவு வகைகளை கூறி வயித்தியம் செய்யிறார். என்ரை மனைவிக்கு என்ன வருத்தம் என்று ஆங்கில மருத்துவம் கண்டு பிடிக்கவில்லை.பின்னர் ரகுராமிடம் சென்றுதான் குணமாகி இப்ப நல்ல சுகதேகியாய் உள்ளார்.பலரின் அறிவுக்கொழுந்துகள் போன்ற சமுதாய தோற்றத்துக்குள் உள்ள டம்மி நிலையையும் … வைத்தியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்வையும் இங்கு தெழிவாக்க் காணக்கூடியதாக உள்ளது..
அவர்களை விழிப்படையச்செய்ய முடியாது என்னவாவது செய்யட்டும் ..GMOA Branch Union – Teaching Hospital Jaffna … இவர்களும் குணப்படுத்தல் சமய கூட்டங்களுக்கு போக வேண்டியவர்களே…
.. -
இப்பவெல்லாம் Rs.250/- வாங்குறது பணமோசடியாவும்…Rs.1,500/- வாங்குறது சேவையாவும் மாறிற்று போல..தயவு செய்து மெதுவாக #உருட்டவும்.
-
இன்னுமொரு பதிவு , பல வருடங்களுக்கு முன்னர் பருத்துறை வைத்திய சாலையில் சீசர் செய்ய முற்பட்ட போது விறைப்பு தன்மை ஏற்படாத தன்மையில் பெண்ணின் வயிறு வெட்டப்பட்டது. இது யாருடைய தவறு ??? இச் செய்தி தெரியுமா யாருக்காவது??? இப்படி பல கொடுமைகள் அரச வைத்தியம் என்ற பெயரில் .இவர் ஆண்மை குறைவுக்கு எப்படி ஊசியால அக்குஞ்சர் செய்வார்? போறவனுக்கு பிறகு ரியுப் கடையிலதான் பஞ்சர் ஒட்டோனும்இதே போல் நகைப்புக்கு உரிய விடயமாக SLMC Reg no 12707 ஐ பதிவு இலக்கமாக கொண்ட நீர்வேலி வடக்கு நீர்வேலி சந்திக்கு அருகாமையில் சித்த ஆயுர்வேத மருத்துவம் என்று செய்யும் (இரசபாஷாண சரக்குகளை முறையற்ற விதத்தில் சுத்தி செய்து ( Rapid Liver & Renal function – Endocrinal changes within 03months) மற்றும் தொற்றா நோய்களை முற்றிலுமாக குணமாக்கிற என்று வார இறுதி நாட்களில் நூற்றுகணக்கான நோயாளர்களின் உயிர்களோடு விளையாடும் இவருக்கு GMOA UNION Jaffna branch என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது……….???
-
இப்பவெல்லாம் Rs.250/- வாங்குறது பணமோசடியாவும்…Rs.1,500/- வாங்குறது சேவையாவும் மாறிற்று போல..தயவு செய்து மெதுவாக #உருட்டவும்.
-
யாழ் அரச வைத்திய “அதிகாரிகள்” சங்கம் வருத்தத்தை மாத்திறதா காணேல …பதிவு செய்யிறதும் பேப்பர் வேலையும் தான்.
-
நான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சுகருக்கு மாத்திரை எடுத்து வந்தேன், அப்போதும் எனது சுகரின் அளவு 200-340 தற்போது இவரிடம் மூன்றுகிழமைகள் வைத்தியம் செய்தேன் இபோது எந்த மருந்துகளும் இல்லாமல் 135- 160 உள்ளது. இவர் சொல்லும் உணவு முறையை கடைப்பிடிக்காமல் விட்டால் நிச்சயமாக பாதிப்புக்கள் ஏற்படும். அதற்கு நோயாளிகள் நாங்களே பொறுப்பு. ஆனால் ஆங்கில மருத்துவர்கள் புத்திசாலிகள் அவர்கள் கையொப்பத்தை முதலில் பெற்றுக்கொண்டு எல்வற்றையும் செய்து விட்டு பணத்தையும் பறித்துவிட்டு இறுதியாக சொல்கின்றார்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார் என்று.ஏன் அண்மையில் கூட பிரபல நெல்லியடி தனியார் வைத்திய சாலையில் பெண்ணின் கற்பப்பை அகற்றிய பின்னர் துணியைவைத்து தைத்து அதன் மூலம் ஒரு பெண் இறந்ததும் யாருடைய தவறு. தற்போது நீதிமன்றில் வழக்கு விசாரணை உள்ளது.Eanda neenga mattum ithuvaraikkum orutharaium kollaliya appo
-
Good publication and good advice
-
you are trying to play with the international heller , who have superior Hearling abilities , he can heal anything from common Cold to Malignancy! every Day he Heals thousands of Patients , the way he Heals, in near soon there wohnt be any Disease in srilnka ,very soon the scientifica world and whole medical world going to replace their Theories and procols according to our Guru’s Practice
ஆளப்பாத்தா இருட்டறையில் முரட்டு குத்து மொட்ட ராஜேந்திரன் மாதிரி இருக்கிறான். போகிற எல்லோருக்கும் நல்ல குத்துதான்

