காலியில் யுவதி வாங்கிய உள்ளாடைக்குள் மர்ம திரவம்!! கரு உற்பத்தியைத் தடுக்க சதியா?
காலியில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த உள்ளாடைக்குள் (மார்புக் கச்சை) காணப்பட்ட ஒரு வகை ஜெல் மற்றும் சிறியளவான மூன்று உருண்டைகள் கண்டுபிடிப்பக்கட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த உள்ளாடையை (மார்புக் கச்சை) அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கை தருமாறு காலி பிரதம நீதிவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி பொருட்களை நீதிமன்றில் முன்வைத்து பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி, கலேகான பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் காலி நகரிலுள்ள பிரபல ஆடையகத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளாடையொன்று (மார்புக் கச்சை) ஒன்றை வாங்கி அதனை அணிந்தபோது, அதன்முன்பகுதியில் சிறிய ஜெல் பக்கற் ஒன்றும், வெள்ளைநிற சிறிய உருண்டைகள் மூன்றும் காணப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, குறித்த உள்ளாடையில் (மார்பு கச்சை) காணப்பட்ட ஜெல் பக்கற்று மற்றும் உருண்டைகளை சான்றுப் பொருட்களாக நீதிமன்றில் முன்வைத்த பொலிஸார், இது என்னவகையான பொருள், இந்தப் பொருளை கொண்ட உள்ளாடையை (மார்பு கச்சை) அணிவதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? என்பவற்றை அறிந்துகொள்வதற்காக அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவிடுமாறு நீதிமன்றை பொலிஸார் கோரியிருந்தனர்.
காலி பொலிஸ் நிலையத்தின் பல்வகை முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சஜீவ குமாரவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.