காதலனைக் கட்டி வைத்து காதலியின் பெண் உறுப்பில் போதைப் பொருள் தேடினேன்!! கைதான சிங்கள பொலிசின் வாக்குமூலம்!!
மத்தேகம பிரதேசத்தை சேர்ந்த காதலி தனது காதலனுடன் சமனலவெவ நீர்த்தேகத்தை பார்வையிட வந்துள்ளார். அவர்கள் அணைக்கட்டில் இருந்தபோது, அருகில் வந்த ஒருவர் அடையாள அட்டையைக் காட்டி, தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்றும், இருவரிடமும் போதைப்பொருள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
காதலனை கைவிலங்கிட்டு, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பிணைத்து விட்டு, அவரை பரிசோதித்துள்ளார்.
பின்னர், 18 வயது காதலியை பரிசோதிக்க வேண்டுமென கூறி, அருகில் உள்ள புதருக்கு இழுத்துச் சென்று ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், தனது கையடக்க தொலைபேசியில் யுவதியை நிர்வாணமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
சமனலவெவ அணைக்கட்டுக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களில் உடையில் நடமாடுவதாகவும், யுவதியொருவரை அருகிலுள்ள பற்றைக்குள் இழுத்துச் செல்வதாகவும் அந்த சம்பவத்தை அவதானித்த ஒருவர் சமனலவெவ பொலிஸாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கினார்.
தகவல் கிடைத்ததும் துரிதமாக செயற்பட்ட பொலிசார், அணைக்கட்டு பகுதிக்கு வந்தனர்.
பொலிசார் அங்கு வந்த போது, காதலன் மோட்டார் சைக்கிளில் கைவிலங்கிட்டு, பிணைக்கப்பட்டிருந்தார்.
அவர் வழங்கிய தகவலின்படி, அருகிலுள்ள பற்றைக்காட்டை பொலிசார் சுற்றிவளைத்த போது, நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் யுவதி நின்றுள்ளார். அருகில் பொலிஸ்காரரும் நின்றார்.
காதலர்களை மீட்ட பொலிசார், காமவெறி கான்ஸ்டபிளை கைது செய்தனர்.
இதன்போது, கான்ஸ்டபிள் எதிர்ப்பு தெரிவித்து, கடமையை செய்யவும் விடமாட்டீர்களா என எகிறியுள்ளார்.
அதாவது, தனிமையில் இருந்த ஜோடி போதைப்பொருள் வைத்திருக்கிறார்களா என சோதனை நடத்தியதாகவும், யுவதி உள்ளாடைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளாரா என சோதனையிட்டதாகவும் விபரீத விளக்கமளித்துள்ளார்.
சந்தேக நபர் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பிரசாத் அபேசேகர (76220) என அடையாளம் காணப்பட்டார். சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதான பொலிஸ் உத்தியோகத்தர் மீது சிறந்த முறையில் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக, நிறுவன மட்டத்திலும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தல்துவ கூறினார்.
