புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (11.06.2019)

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங் கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சேமிக்க வேண் டுமென்ற எண்ணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்பு கள் அடங்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.