புதினங்களின் சங்கமம்

மத போதகர் துாண்டுதல்!! கிறிஸ்தவ சபை குழு உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து அட்டகாசம்!! வீடியோ

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறிநுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
அது தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தி வெளியாகிய நிலையில் அச்சுவேலியில் இருந்து தமது சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் யாழ்.நகர் பகுதியில் உள்ள உதயன் அலுவலகத்திற்கு வருகை தந்து , அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன் , நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ , புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு உதயன் நிறுவனத்தினர் அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முதல் அக்கும்பல் தமது சொகுசு பேருந்திலும் பட்டா வாகனத்திலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சபையைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டு கஸ்டத்தின் நிமிர்த்தம் இந்த கிறீஸ்தவ சபையில் சேர்ந்துள்ளார்கள் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன.
இவ்வாறான கிறீஸ்தவ சபைகளில் சேரும் பெண்கள், சிறுமிகள் மதபோதகர்களால் பாலியல்துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வந்துள்ளன.
இவ்வாறான வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மதம் மாறவிடாது சைவ சமய அமைப்புக்கள் கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் கோவில்களை கோடிக்கணக்கில் கட்டுவதிலும் பார்க்க ஏழ்மை நிலை காரணமான மதமாற்றத்தை தடுத்து நிறுத்தல் அவசியம் எனவும் இந்து சமய நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளார்கள்.

அதனை அடுத்து உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.