கிளிநொச்சியில் துஸ்யந்தனை மாமன் மண்வெட்டியால் அடித்துக் கொன்றது ஏன்?
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் மண்வெட்டி பிடியினால் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (04) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் வசிக்கும் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை மனைவியின் தந்தை இடைநடுவில் வழிமறித்துள்ளார்.
இதன்போது இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆத்திரமடைந்த மாமனார் குறித்த மருமகனை மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

