யாழ் காரைநகரில் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்கள்!! மயங்கி விழும் பாடசாலை மாணவர்கள்!!
யாழ் காரைநகரில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வரும் மாணவர்களில் பலரும் காலை நேரக் சாப்பாடு இன்றி பசியால் மயங்கமடையும் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும் காரைநகரில் உள்ள சில பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 70 வீதமான வர்த்தகத்தை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளார்கள் காரைநகரைச் சேர்ந்த செல்வந்தர்கள். அத்துடன் புலம்பெயர் தேசங்களிலும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள். இவ்வாறனவர்கள் தங்கள் ஊரை மறக்கவில்லை. காரைநகரில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள்,கலை, கலாச்சார நிகழ்வுகளுக்காக அவர்கள் பெரும் தொகைகளை வாரி வழங்கி வருகின்றார்கள். இருப்பினும் இவ்வாறானவர்கள் காரைநகரில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான திறன்விருத்தி மற்றும் போசாக்கு மிக்க உணவினை வழங்குவதறகான செயற்பாடுகளை செய்வதற்கு மறந்து விட்டார்களா? என காரைநகரில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் வெளி ஊர்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பாக காரைநகரைச் சேர்ந்த செல்வந்தர்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளார்கள்
