பிரித்தானிய கடைக்காறர்கள் இலங்கையில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கலாமா..?
ஆம் எடுக்கலாம்.
அதற்கு அந்த கடைக்காறர் Sponsor license பெற்றிருக்க வேண்டும். ஒரு கடைக்கு 2 பேரை எடுக்கலாம்.
ஆனால் உள்ள சிக்கல் என்னவெனில் நீங்கள் பிரித்தானியாவில் வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்து யாரும் அந்த வேலைக்கு வரவில்லை என உறுதிப்படுத்துதல் வேண்டும். என் கடைக்கெல்லாம் ஆள் தேவை என விளம்பரம் செய்தால் அடுத்த நாளே 10 வெள்ளையர்கள் வரிசையில் நிற்பார்கள். அதனால் விளம்பரம் செய்வது சிக்கலாகிறது.
இதையும் தாண்டி sponsor license எடுக்க முயற்சித்தால் home office கடைக்கு வந்து 2-3 hours interview வைக்கும். அதற்காக தயார்படுத்தல் அவசியம்.இதற்கான செலவுகள் £5000-£10,000 வரை வேறுபடுகிறது.
சரி license எடுத்தாச்சு ஆட்களை எடுக்கலாம் எனில் வரும் நபர் IELTS பரீட்சையில் குறைந்தது 4.0 புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும்.
இந்த புள்ளிகளை எடுத்தவர்களை எடுக்க முயற்சிக்கும் போது அவர்களது வருமானம் அவர்களுக்கு போதுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருபவர் தனியே வேலை செய்பவர் ஆயின் அவர் ஒரு முழு நேர வேலை ஊடாக அதிகமாக £26,000 வரை உழைக்க முடியும். வேறு வேலை செய்து பிடிபட்டால் வீசா உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த £26,000 ஐ சம்பளமாக எடுக்கும் ஒரு குடும்பத்தவர் தன் குடும்பத்தோடு வருவாராயின் வருடத்திற்கு
House rent £12000
Utility bill £3600
Water bill £600
Council tax £1800
Phone bill £1200
Food bill £7200
Car insurance £1000
MOT and service £500
Fuel £4800
Party & function £2400
Kids tuition fee ££6000
Etc £5000
(இவை வருடத்திற்கான முக்கியமான செலவுகள்)
மேலே குறிப்பிடப்பட்ட செலவுகள் வருமானத்தை விட அதிகமானவை. இத்தனையும் தாண்டித்தான் மிச்சம் பிடிக்க வேண்டும். இல்லை கணவனும் மனைவியும் கடின உழைப்பு உழைக்க வேண்டும்.
இந்த நிலையில் குழந்தைகளுடன் வருவது சாத்த்தியமா? என பாருங்கள்.
என்னை பொறுத்த வரையில் தனி நபர் அல்லது கணவன்-மனைவி இருவரும் இந்த விசாவை பயன்படுத்தி வருவதே சரி. பிள்ளைகளோடு வருவது சிக்கலான பொருளாதார கஸ்ரத்தை ஏற்படுத்தும்.!
