வேலணை கிழக்கில் கன்றுதாச்சி பசுவை இறைச்சிக்காக வெட்டும் கொடூரர்கள்!! (Photos)
தீவகத்தில் இறைச்சிக்காக பசுமாடுகள் கொல்லப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கி்ன்றார்கள். வேலணையில் அண்மையில் கன்று ஈணும் நிலையில் காணப்பட்ட பசுமாடு ஒன்றை கொடூரமாகக் கொன்று இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார்கள் கொடியவர்கள். இரவு வேளைகளில் மோட்டார் சைக்கள்களிலும் ஆட்டோ மற்றும் வடி வாகனங்களில் வரும் மாட்டுக் கள்ளர்கள் இவ்வாறான கொடிய செயலை செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.



