புதினங்களின் சங்கமம்

யாழில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

யாழ்.புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

மரண விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.