புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் 20 நாட்களாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபேசனைக் காணவில்லை!! மனைவி, பிள்ளைகள் கதறல்!! (Photos)

கடந்த இருபது நாட்களாக பிரான்ஸில் காணமல் போன குடும்பஸ்தரான,
திரு.சிவசுப்பிரமணியம் சபேசன் ( date of birth. 07.09.1982) (அப்பன் என்றும் அழைப்பார்கள்)
அவரின் மனைவி ,மற்றும் குழந்தை ஈழத்தின் மல்லாகத்தில் கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர் இல்து பிரான்ஸ் பிராந்தியத்தின் 7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்திருக்கின்றார்.
அத்தோடு இவர் பல தமிழ் வர்த்தக நிலையங்களிலும் பணிசெய்து இருக்கின்றார்.
இறுதியாக லாக்கூர்னோவ் பிராந்தியத்தில் ஒரு தமிழ் வர்த்தக நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார்.
இவருக்கு வதிவிட அனுமதி (visa) இன்னும் கிடைக்கவில்லை.
இவர் இறுதியாக தான் இருந்த வீட்டு உரிமையாளருடன் முரண் பட்டுவிட்டுச் சென்றதாகவும் தகவல். ஆனாலும் அவரைத் தெரிந்தவர்கள் வீட்டு உரிமையாளரை விசாரித்த பொழுது அவர் படியில் இருந்து விழுந்ததாகவும், குறித்த இந்த முகவரியிலுள்ள
Hôpital Pitié-Salpêtrière –
Bd Vincent Auriol, 75013 Paris, France
மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அங்கே சென்று விசாரித்த பொழுது
இப்படியான பெயரில் யாரும் அனுமதிக்கப் படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
இதற்குள் பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும், தன்னுடைய கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி மட்டும் தனது காதுகளிற்கு கேட்டால் போதுமென்றும் அவருடைய மனைவி கதறலுடனும், கண்ணீருடனும் தெரிவித்திருந்தார்.
இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது அந்தக் குழந்தையும் தாயின் கதறலைக் கேட்டு,
தானும் அப்பா …அப்பா ..
என்று உயிர் உருக அழுவதைக் கண் கொண்டு பார்க்க முடியாதுள்ளது…
எம் இனிய பிரான்ஸ் வாழ் உறவுகளே… இந்தக் குழந்தையின் தந்தையைக் கண்டு பிடிக்க எல்லோரும் உதவி செய்ய வேண்டுமென்று எம் உறவுகளாகிய உங்களிடம் அந்த அபலத் தாயின் சார்பிலும், குழந்தையின் சார்பிலும் உங்கள் எல்லோரையும் பணிவாக நான் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் இவர் காணமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு .
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இவருடைய உறவினரான திரு சிவதரன் என்பவரை
???????
00 33 621 83 24 92
இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
May be an image of 1 person and standingMay be an image of 1 person and beardMay be an image of 1 person and beard