புதினங்களின் சங்கமம்

யாழ் தாவடியில் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து!! ஒருவர் பலி!! இன்னொருவர் படுகாயம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்ததாகவும் அதில் வந்த மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வம்பன் வீடியோக்களுக்கு இந்த இணைப்பை அழுத்தி SUBSCRIBE செய்த பின்னர் பார்வையிடலாம்

May be an image of 6 people, motorcycle and roadMay be an image of 7 people, motorcycle and outdoorsMay be an image of 2 people, people standing, car and outdoorsMay be an image of 2 people, car and outdoorsMay be an image of 1 person, car and outdoors