Home புதினங்களின் சங்கமம் யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மா.மோகனராசா ஆட்கடத்தல் வழக்கில் இந்தியாவில் கைது!!

யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மா.மோகனராசா ஆட்கடத்தல் வழக்கில் இந்தியாவில் கைது!!

வடமராட்சி பகுதியில் போதைப்பொருள், மனிதக் கடத்தல் வழக்குகளில் தொடர்புபட்ட ஒருவர் இந்தியாவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தொண்டமானாறு, அம்மன் கோயிலடி பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகர் மோகனராசா (43) என்பவரே நேற்று (4) இரவு தமிழகத்தின் நாகப்பட்டினம் கடற்கரையில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம், வெள்ளப்பள்ளம் கடற்கரையில் நேற்றிரவு அவர் கைதானார்.

இலங்கையில் வாழ முடியாமல் 2 இலட்சம் ரூபா பணம் செலுத்தி படகு மூலம் இந்தியாவிற்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும், அவர் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நோக்கத்திற்காக இந்தியா வந்த போது, பொலிசாரிடம் சிக்கியதும் நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நபர் சில வருடங்களின் முன்னர், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முயன்றபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். கிழக்கு மாகாணம் உள்ளி்ட பகுதிகளில் நிதி நிறுவனத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபா வரை மோசடி செய்த குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பத்தை தமிழகத்தில் இறக்கிவிட்டு வரும் போது கைதானதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதேவேளை, போதைப்பொருள் வழக்கிலும் கைதாகியிருந்தார்.