புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி முழங்காவில் நகரில் சோபா என்று ஒரு பெண்ணின் ,,,,!! (Photos)

சோபா என்று ஒரு சகோதரி. கிளிநொச்சி முழங்காவில் நகரில் வசிக்கிறார்.
2007 ஆம் ஆண்டு யுத்தநடவடிக்கையில் காயமடைந்தவர். பின்னர் தடுப்பு முகாமில் இருந்து, 2010 இல் விடுதலையானவர். இவரது கணவரும் யுத்தத்தில் காயமடைந்து, ஒரு கை முற்றாகச் செயலிழந்தவர். இருவராலும் பெரியளவு தொழில் முயற்சிகளில் ஈடுபடமுடியாது. உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது.
ஆனாலும் அவர்கள் சோர்ந்துபோகவில்லை.

May be an image of indoor
தன்னிடமிருந்த வெறும் 1500 ரூபாவைக் கொண்டு, மரவள்ளிக் கிழங்குகள் வாங்கி, அவற்றைப் பொரித்து, பையில் அடைத்து விற்க ஆரம்பிக்கிறார் சோபா. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு, மிக்‌ஷர், பக்கோடா, இறால் வடை, இறைச்சிச் சரக்கு என்று மேலும்பல பொருட்களை உற்பத்தி செய்கிறார்.
இவரிடம் ஒரு சிறிய மோட்டார் சைக்கிள் உண்டு. அதில் உற்பத்திப் பொருட்களைப் பெட்டியாகக் கட்டி, தானே கடைகளுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துகிறார். நாளாக நாளாக தொழில் விரிவடைந்து செல்கிறது. தமது தொழிற்சாலைக்கு ‘டயானா சிறுகைத் தொழிலகம்’ என்று பெயர் சூட்டுகிறார். பாடசாலை செல்லும் இவரது தம்பியும் பகுதிநேரமாக அக்காவுக்கு உதவுகிறார்.

May be an image of 1 person and indoor
தானே பொருட்களை எடுத்துச் சென்று கடைகளில் சந்தைப்படுத்த சோபா வெட்கப்படவில்லை. “இன்ன இன்ன தொழில்களைச் செய்தால் கௌரவம், இன்ன இன்ன தொழில்களைச் செய்தால் கௌரவம் இல்லை” என்று இலங்கையில் ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலை இந்தச் சகோதரி கிழித்து எறிகிறார்.
செய்யும் தொழிலே தெய்வம்..!

May be an image of 1 person and child
இன்று சகோதரி சோபாவின் தொழிற்சாலையில் 7 பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருக்கிறார். தானும் முன்னேறி, அடுத்தவர்களையும் முன்னேற்ற நினைக்கும் இவருக்கும், இவரது கணவருக்கும் வாழ்த்துக்கள்.\

May be an image of motorcycle and outdoorsMay be an image of chow mein