லண்டன் தமிழ் குடும்பஸ்தரை ரிக்ரொக்கில் மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரை தனது வலையில் வீழ்த்தி 15 ஆயிரம் பவுண்ஸ் பணத்தை ஏமாற்றி பெற்றுள்ள வவுனியாவைச் சேர்ந்த தேவகி என்னும் யுவதியின் திருவிளையாடல் வெளிவந்துள்ளது. குறித்த குடும்பஸ்தரின் மனைவி இது தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றுக்கு தகவல்களை அனுப்பியுள்ளார். குறித்த யுவதி ரிக்ரொக்கில் தனது வீடியோக்களை வெளியிட்டு வந்ததாகவும் இதன் மூலம் தனது கணவருடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரியாது தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். லண்டனில் சிறிய கடை ஒன்றை வைத்திருக்கும் தனது கணவரின் அண்மைய போக்கு வித்தியாசமாக இருந்ததாகவும் அத்துடன் கடை வருமானத்தை விட செலவுகள் அதிகரித்து காணப்பட்டாதால் தான் அது தொடர்பாக கணவரை கேட்ட போது சரியான பதில் அவர் தரவில்லை எனவும் மனைவி தெரிவித்தார். இதனால் தான் சந்தேகமடைந்து அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி, வட்சப் தொடர்புகளை ஆராய்ந்த போது 15 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேற்பட்ட பெருமளவு பணம் வவுனியாவுக்கு குறித்த பெண்ணின் பெயரில் உண்டியல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதை தான் அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் பின்னர் கணவரை இது தொடர்பாக கேட்ட போது அவர் தன்னை தாக்க முற்பட்டு தற்போது தாம் பிரிந்து வாழ்வதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். தானும் இரு குழந்தைகளும் தற்போது தேவகியால் நடுத்தெரிவில் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தான் வவுனியாவில் உள்ள உறவினர்கள் மூலம் பொலிஸ் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த யுவதி சிங்கப்பூரில் நிற்பதாக தான் சந்தேகிப்பதாகவும் ஏனெனில் தனது கணவர் கடந்த மாத முற்பகுதியில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு சிங்கப்பூர் செல்கின்றேன் என கூறி அங்கு சென்றதாகவும் மனைவி தெரிவித்தாா்.
976510830வி எனும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய நெலுக்குளம் வீதி தேக்கவத்தை எனும் அடையாள அட்டையில் உள்ளவாறான முகவரி கொண்ட தேவகி சண்முகம் என்ற பெயருக்கே கணவர் பணம் அனுப்பியதாகவும் அந்த பெண்ணின் வட்சப் இலக்கத்தில் இருந்த புகைப்படமே மனைவியால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மேலதிக தகவல்கள் யாருக்காவது வவுனியாவில் தெரிந்தால், எமது முகப்புத்தக உட்பெட்டிக்கு அனுப்பினால் தனக்கு அதனை தெரியப்படுத்தி உதவுமாறு அப் பெண் எம்மை கேட்டுள்ளார்.

