அடங்காத மருதனார்மடம் கொத்தணி: மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி!
யாழ் மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விபரம்
16.12.2020. புதன் கிழமை
5. 00 pm.
* இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சங்கானை – 4 பேர்
உடுவில் – ஒருவர்
பண்டத்தரிப்பு – ஒருவர்
மானிப்பாய் – ஒருவர்
வடலியடைப்பு – ஒருவர்
என எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (டிச-15) மருதனார்மடம் கொத்தணியில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 5.00 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் மேலும் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

