யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் கடித்து விட்டு தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர்!
ஊர்காவற்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் கடித்து விட்டு தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள சூதாட்ட நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் முற்றுகையிட்ட போது ஆறு அல்லது ஏழு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரை பார்த்ததும் சூதாட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அந்த இடத்தை சோதனை செய்த பொலிஸ் குழுவில் இருந்த கான்ஸ்டபிள் தர்மேந்திரன் துரத்திச் சென்று சூதாடி ஒருவரைப் பிடித்தார்.
சந்தேகநபர் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி அவரது பிடியில் இருந்து தப்பிக்க கடுமையாக முயற்சித்துள்ளார். இதன்போது, சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கன்னத்தையும் கடித்து காயங்களை ஏற்படுத்தியதாகவும் ஆனால் கான்ஸ்டபிள் தர்மேந்திரன் இரும்புப் பிடி பிடித்ததால், சந்தேக நபரின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தார்.
33 வயதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
