யாழில் தண்டவாளத்தில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை!!! தெய்வமாக வந்து காப்பாற்றிய விதானை!! நடந்தது என்ன?
தொடரூந்து தண்டவாளத்தில் படுத்திருந்த ஒன்றரை வயதுக் குழந்தையால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் நாவலடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.பிரிவு கிராம அலுவலர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் குழந்தை படுத்திருப்பதை அவதானித்து, உடனடியாகச் சென்று குழந்தையை மீட்டுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அங்கிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் குழந்தையின் வீடு இருந்தமை தெரியவந்தது.முற்றத்தில் நின்று விளையாடிய குழந்தை, எவ்வாறு அங்கு வந்தது என்பது தனக்குத் தெரியாது தாயார் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.