புதினங்களின் சங்கமம்

விசுவமடுவில் மோட்டார் சைக்கிள்-துவிச்சக்கரவண்டி விபத்து! முதியவர் உயிரிழப்பு!! (படங்கள்

விசுவமடு – ரெட்பானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்ற முதியவரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த முதியவர் தருபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (15-12-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள் எவரும் சடலத்திற்கு உரிமைகோராத காரணத்தினால் தருமபுரம் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.