புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரி நகரப் பகுதியில் வீட்டுக் காணிக்குள் பாரிய முதலை இரு நாய்களை விழுங்கியதால் பரபரப்பு!! (வீடியோ)

யாழ் சாவகச்சேரி நகரப்பகுதியில் சன அடர்த்தி மிக்க குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றின் காணிக்குள் பாரிய உருவமுள்ள முதலை ஒன்று இன்று அதிகாலையிலிருந்து காணப்படுகின்றது. பெருமளவு மக்கள் இந்த முதலையை பார்வையிட்டு வருகின்றனர். சற்று முன் குறித்த முதலையை வன அதிகாரிகள் பிடித்து கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 8 அடி நீளமான இ்ந்தப் பாரிய முதலை மனிதர்களை இழுத்துச் செல்லும் அளவுக்கு பலமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த காணிக்குள் இரு நாய்களை இந்த முதலை விழுங்கியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த முதலை எவ்வாறு அப் பகுதிக்கு வந்தது என பார்வையிட்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.