புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பேரூந்து கிளிநொச்சியில் கவிழ்ந்து 22 பேர் படுகாயம்!!(வீடியோ)

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05) அதிகாலை 4.45 மணியளவில் விபத்து இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி இரணைமடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

May be an image of 7 people, people standing and outdoorsMay be an image of 1 personMay be an image of 5 people and text that says "AMBULANCE 1990 අවස්ථාවකදි 1990 TOLL FREE ගාස්තු Toll ree 199 W-1428 Service n AMBUL"May be an image of 7 people and outdoorsMay be an image of 3 people