அவனுக்கு 15 அவளுக்கு 14…… காமத்துடன் காதலிப்பவர்கள் மட்டும் இதை பாருங்கள்!! ( Photos)
2012 அவனுக்கு 15 வயது; அவளுக்கு 14 வயது. காலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தில் இவர்கள் காதல் ஆரம்பிக்கின்றது. காதலை சொன்ன தினம் 28ம் திகதி நவம்பர் மாதம் 2012.
நாம் இருவரும் இளவயதினர் தான். ஆனால் வாழ்வில் நாம் எடுத்துக்கொண்ட துறையில் ஜெயித்து பின் திருமணம் செய்து கொள்வோம் என தமக்குள் உறுதி பூண்கின்றனர்.
விரைவாக 10 வருடங்கள் கடக்க இன்று 2022 இல் அந்த அதே சிறுவன் இன்று இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவன்; முதிர்ச்சியும் கிரிக்கட் திறமையும் இளவயதிலேயே கைவரப் பெற்ற #சரித்_அசலங்க. அந்தப் பெண் #கவிந்தி, ஆங்கில ஆசிரியை.
அதே 28ம் திகதி நவம்பர் மாதம் தான் திருமணம் இடம்பெறவேண்டும் என்று விடாப்பிடியாக நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.
குணதிலக்கக்கள் உருவாகின்ற சமூகங்களிலிருந்து தான் அசலங்கக்களும் உருவாகின்றார்கள். குணத்திலக்ககளும் அசலங்ககளும் கூடவே வாழ்பவர்களாகவும் ஏன் நண்பர்களாகவும் கூட இருப்பார்கள். இருவரையும் வேறுபடுத்துவது திறமையோ, கடின உழைப்போ இல்லை. கொஞ்சம் ஒழுக்கம், நிறைய இலட்சியம் அவ்வளவு தான்.
பிரதி Senthooran A R Thiruchchenthooran












