ஆயிரக்கணக்கான மாணவர்களை அலங்கோலப்படுத்தி சீரழித்த யாழ் மாநகரசபை!! மழைக்குள் நடந்த கேவலம்…
முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி என்று ஒரு போட்டியை தொடங்க முற்பட்டு சதுரங்கத்தில் ஆர்வமாக இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஆர்வத்தை மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள் யாழ் மாநகரபை அதிகாரத்தரப்பினர். ஏற்கனவே யாழ் மாநகரசபையின் நிர்வாகத்திறனை நன்றாக அப்பகுதிக்குள் வாழ்பவர்கள் மற்றும் வெளிப்பகுதியில் வாழ்பவர்கள் அறிந்திருந்தார்கள். யாழ் மாநகரசபைதான் போட்டி நடாத்துகின்றதா? என அறிந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என சந்தேகத்துடன் இருந்த சதுரங்க ஆர்வலர்களையும் “யாழ் முதல்வர் கிண்ண போட்டி“ என்ற ஒரு வார்த்தை கவர்ந்ததால் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான சதுரங்க ஆர்வலர்களான மாணவர்களும் பெற்றோரும் நேற்று காலை தொடங்கி யாழ் இந்து மகளீர் கல்லுாரியை முற்றுகையிட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் சரியான முறையில் ஒழுங்கு படுத்தல்களை யாழ் மாநகரசபை நிர்வாகம் மேற்கொள்ளாத காரணத்தால் போட்டி மிகவும் தாமதமாகவே தொடங்கியிருந்தது.
சதுரங்கம் என்பது யாழ் மாநகசபை ஏரியாவில் குப்பை அள்ளுவது மற்றும் வெள்ளம் வடிந்தோடச் செய்வது போல் படை பட்டாளங்களை வைத்து நடாத்தலாம் என யாழ் மாநகரசபையின் முதல்வருடன் நெருக்கமானவர்கள் நினைத்திருக்கலாம். ராஜாவைவிட ராணிக்கே பவர் அதிகம் என்பதை மட்டுமே சதுரங்க விளையாட்டில் அறிந்து வைத்திருந்து அதை வைத்து கவிதை எழுதும் அளவிற்கே அறிவுள்ள யாழ் மாநகரசபை ஆணையளரும் அவரது அணியினரும் நேற்று அதிகாலையில் இருந்தே பெரும் போர் நடவடிக்கை என்ற ரீதியில் அங்கு நின்றிருந்தனர். ஆனால் இன்று காலை போட்டி முற்றாக ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் சரியான முறையில் சதுரங்கப் போட்டியின் பெறுபேறுகளை நிர்வகிக்க வக்கில்லை என்பதே என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தார்கள். வேறு மாவட்டங்கள், பிரதேசங்களில் இருந்து கார்கள் மற்றும் வாகனங்களில் வந்து விடுதிகளில் தங்கியிருந்து தங்களது பிள்ளைகளின் சதுரங்க ஆற்றலை அளவிடுவதற்காக வந்திருந்தவர்களை “செம்மறிகள்“ என நினைத்து செயற்பட்டுள்ள யாழ் மாநகரசபை நிர்வாகத்தினர் இனிவரும் காலமாவது சதுரங்கம் போன்ற நுட்பமான போட்டிகளை நடாத்துவதிலிருந்து விலக வேண்டும். அல்லது அந்த அந்த போட்டிகளுக்கு அதற்கு தகுதியானவர்களை தொடர்பு கொண்டு போட்டிகள் நடாத்த வேண்டும் என சதுரங்க ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
வடமாகாண ஆளுநர் சதுரங்க கிண்ணம் மற்றும் முதலமைச்சர் கிண்ணம் போன்றவற்றை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அந்த அந்த தரப்பினர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
வம்பன்

