புதினங்களின் சங்கமம்

நேசமணியின் நிலைக்குப் போனது இலங்கை அணி!! சுத்தியல் அடித்த நியுஸ்லாந்து!!

இலங்கை அணியுடனான முதலாவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது.<br>
இலங்கை அணி நிர்ணயித்த 137 ஓட்டங்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அடைந்தது.<br>
ஐசிசியின் 12ஆவது  உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமானது. இரண்டாவது லீக் போட்டி கார்டிக் மைதானத்தில் இன்று இடம்பெற்றது. போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.<br>
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.

 

*ஆரம்பமே சறுக்கல்
*

லகிரு திரிமன்ன, திமுத் கருணாரத்ன ஜோடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஆட்டத்தின் முதல் பந்தை
பவுண்டரிக்கு அனுப்பிய திரிமன்ன, இரண்டாவது பந்தில் எல்பிடபுள்யு முறையில்
வெளியேறினார். தொடர்ந்து வந்த குசால் பெரேரா அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.

குசால் பெரேரா 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்களாக 29 ஓட்டங்களை எடுத்த நிலையில்
ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் குசால் மென்டிஸ்
ஒட்டமெதனையும் பெறாமலும், தனஞ்சய டி சில்வா 4 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மத்யூஸ்
ஓட்டமெதனையும் பெறாமலும் ஜூவன் மென்டிஸ் ஒரு ஓட்டத்துடனும் வந்த வேகத்தில் பவிலியன்
திரும்பினர்.

அதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 60 ஓட்டடங்களை எடுத்த நிலையில் 6
விக்கெட்டுக்களையிழந்து தடுமாறியது.

ஒரு முனையில் விக்கெட்டுக்கள் மடமடவெனச் சரிந்த போதும் மறுமுனையில் அணித் தலைவர் திமுத்
கருணாரத்ன நிலைத்து நின்றாடினார். அவருக்கு திசார பெரோவும் ஓரளவு இணை வழங்க இலங்கை
அணி 22 ஓவர்களில் 100 ஓட்டங்களை எடுத்தது.

திசார பெரேரா 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த உதான ஓட்டமெதனையும் பெறாமலும் லக்மல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் அரைச்சதத்தின் மூலம் இலங்கை அணி 22.2 ஓவர்களில் 136
ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி, பேர்ஹூசன் இருவரும் தலா 3
விக்கெட்டுக்களையும் போல்ட், ஹிரான்ட்ஹோமி, நீசம் மற்றும் சன்டர் ஆகியோர் தலா ஒரு
விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணிக்கு 50 ஓவர்களில் 137 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.