பலாலி இராணு முகாமுக்குள் குண்டு வெடிப்பு!! ஆமி பலி!! 4 ஆமி படுகாயம்!!
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் எதிர்பாராதவிதமாக குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அனர்த்தத்தில் இராணுவ வீரர் ஒருவர்உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பழைய குண்டுகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தின் குண்டு செயலிழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்ட நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரும் பலாலியிலுள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
எனினும் இராணுவத்தரப்பிலிருந்து இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இதுவரை வெளிப்படுத்தப் படவில்லை.

