யாழ்ப்பாணத்தவர்கள் உட்பட 306 இலங்கையர்களுடன் கனடாவுக்கு சென்ற கப்பல் மூழ்கின்றது!!வீடியோ இணைப்பு)
306 இலங்கையர்களுடன் சட்டவிரோதமாக கனடாவுக்கு பயணமான கப்பல் பிலிப்பைன்ஸ் – வியட்னாம் இடையிலான கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலில் சுமார் 30 குழந்தைகள் வரையில் உள்ளதாகவும், கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கப்பலில் உள்ள ஒருவருடைய தொலைபேசி ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை கடற்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பலிப்பைன்ஸ் கடற்படைக்கும் தகவல்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன்,
பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன.
306 பேருடன் கனடா நோக்கி சென்ற சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு வியாட்நாமுக்கும் பிலிப்பைன்ஸ் இடையிலான இந்தோ பசுபிக் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</div
இக் காணொளியில் கப்பலில் உள்ள யாழ் இளைஞன் அப்பா, அம்மாவுக்கு சொல்ல வேண்டாம் என கனடா தமிழர் ஒருவருக்கு தொலைபேசியில் கூறும் ஒலிப்பதிவுகள் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.


