புதினங்களின் சங்கமம்

வடபகுதியை உலுக்கிய வவுனியா விபத்தில் ஓட்டுனர் செய்த தியாகம் இது!! (Video)

நேற்றையதினம் வடபகுதியை உலுக்கிய பேருந்து விபத்தில் நடந்தது என்ன என்பதை அறிய ஓட்டுனர் உயிருடனில்லை ஆனால் விபத்து நடந்த இடத்திற்கு சென்று வந்தவன் என்ற வகையில் மரணித்த ஓட்டுனரின் தியாகத்தையும் நினைத்து ஆச்சரியப்பட்டேன்.
சில வேளை இந்த விபத்திற்கான காரணம் ஓட்டுனரின் கவனயீனமாக இருக்கலாம் ஆனால் வேகமாக வந்து தட்டுத்தடுமாறி பாலத்தின் விளிம்பை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழக்கூடிய பேருந்தை ஓட்டுனர் பக்கம் திருப்பி வீதியின் உள்பக்கம் விழ வைத்திருக்கிறார் ஓட்டுனர். வீதியில் அனேகமாக நடக்கின்ற விபத்துக்களில் என்னதான் வாகனம் கட்டுப்பாட்டையிழந்தாலும் குறித்த வாகனம் அதிகம் மோதும் பகுதி கிளினர் சீற் என்று சொல்லப்படுகின்ற ஓட்டுனரின் இடது புறப்பகுதியாகும் அது லாவகமாக ஓட்டுனர்கள் தம்மைப்பாதுகாக்க செய்யும் உத்தியாகும் ஆனால் நேற்றைய சொகுசுப்பேருந்தின் ஓட்டுனர் அவ்வாறான ஒரு காரியத்தை செய்ய நினைத்திருந்தால் பேருந்து ஆற்றுள் பாய்ந்து உயிரிழப்புக்கள் அதிகமாயிருக்கலாம் அவ்வாறான இழப்புக்கள் ஓட்டுனரின் உயிர்த்தியாகத்துடன் குறைக்கப்பட்டுள்ளமை ஓரளவு மனம் நிம்மதி தரும் விடயமாகும். ஆகவே
அந்த ஓட்டுனருக்கு தலைவணங்குகிறேன்.
நன்றியுடன்
எஸ்.தவபாலன்

May be an image of 2 people and outdoorsMay be an image of 9 people, people standing, tree and roadMay be an image of 8 people and outdoorsMay be an image of 9 people and outdoorsMay be an image of 12 people and outdoorsMay be an image of 7 people, motorcycle and outdoorsMay be an image of 5 people and outdoors