புதினங்களின் சங்கமம்

யாழில் சிறுவனை வாளால் அறுத்த சம்பவத்தில் ஆவா குழு தலைவன் கைது!!

ஆவா ரௌடிக்குழுவின் தலைவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இணுவில் பகுதியில் 17 வயது இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இன்று மாலை அவர் கைதாகினார்.

கடந்த 24ஆம் திகதி இணுவில் பகுதியில் 17 வயதான இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும், உரும்பிராய் கிழக்கை சேர்ந்த இளைஞனே வாள்வெட்டிற்கு இலக்காகினார்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆவா ரௌடிக்குழு தலைவனை இன்று மாலை சுன்னாகம் பொலிசார் கைது செய்தனர்.