புதினங்களின் சங்கமம்

இலங்கையில் 50 பல்கலைகழக மாணவர்களிற்கு எயிடஸ்!!

இலங்கையில் 50 பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் தொற்று நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த திடுக்கிடும் தகவலை தேசிய பாலியல் தொற்று நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

4 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 பிக்குகளும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என டொக்டர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஒன்பது மாதங்களில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டு இலங்கையில் முதல் எச்.ஐ.வி தொற்றாளர் கண்டறியப்பட்டார்.

இதுவரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்டவர்களில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 20 மத குருமார்கள் உள்ளனர்.

1987 முதல், 4404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,000 பேர் இறந்துள்ளதாகவும், 2,300 பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் மதிப்பீடுகளின்படி, சுமார் 3,700 பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சமூகத்தில் சுமார் 1,500 எச்.ஐ.வி பாதித்தவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர்களிடமிருந்து பலருக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

“பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் மக்கள் அதிகமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிறார்கள். குழந்தைகளுடன் பாலியல் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கலாம் ”என்று அவர் மேலும் கூறினார்.