யாழ் நீர்வேலியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் தங்கி நின்று மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு உணவு அருந்திய பின்னர் உறங்க சென்றவர், அதிகாலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்
குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்பில், இளைஞனின் உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

