பிருத்தானியாவில் வசிக்கும் கிளிநொச்சி புலம்பெயர் தமிழன் தாய்லாந்து மசாஜ் விடுதியில் மர்மமரணம்!!
லண்டனை வதிவிடமாகவும் கிளிநொச்சிப் பகுதியை சொந்த இடமாகவும் கொண்ட உருத்திரராசா சகாதேவன் எனும் 47 வயதான குடும்பஸ்தர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் அரை குறை ஆடைகளுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிருத்தானியாவில் கடை ஒன்றை நடாத்திவரும் குறித்த குடும்பஸ்தர் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகின்றது. சிங்கப்பூர் செல்வதாக கூறிச் சென்றதாக குடும்பஸ்தரின் மனைவி தாய்லாந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். இவரது பிறப்புறுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கண்டல் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். அவர் விடுதிக்குள் செல்லும் சிசிரீவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

