புதினங்களின் சங்கமம்

அண்ணனின் சடலத்தினருகே மயங்கி விழுந்து உயிரிழந்த தங்கை!

தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் மரணமடைந்தார்

நேற்று அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி 31 வயதான அகம்பொடி ரங்கி துலாஞ்சனி சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்

அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.