இன்றைய இராசிபலன் (11.09.2022)
மேஷம்: விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: அனுபவ பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். மதிப்பு கூடும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும். சாதிக்கும் நாள்.
கடகம்
கடகம்: இன்றைய நாள் நீங்கள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.
கன்னி
கன்னி: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரிகள் சில முக்கியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
துலாம்
துலாம்: பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. கனவு பலிதமாகும் நாள்.
தனுசு
தனுசு: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சியால் முன்னேறும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்களின் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

